திங்கள், மார்ச் 21, 2011

பாமகவின் 4வது வேட்பாளர் பட்டியல்


பாமக போட்டியிடும் தொகுதிகளுக்கான 4வது வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது.


தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் பா.ம.க. போட்டியிடுகிறது. இந்த கூட்டணியில் பா.ம.க.வுக்கு 30 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டது.



இத்தேர்தலில் பா.ம.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியல் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பாட்டாளி இளைஞர் சங்கத்தலைவரும், முன்னாள் மத்திய மத்தியமந்திரியுமான அன்புமணி ராமதாஸ் ஆகியோரின் ஒப்புதலுடன் வெளியிடப்பட்டுள்ளது.


இதுவரை இரண்டு பட்டியல்கள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் மேட்டூர் ஜி.கே.மணி, ஜெயங்கொண்டம் ஜெ.குரு, நெய்வேலி தி.வேல்முருகன், சோழவந்தான்(தனி) மு.இளஞ்செழியன், ஆலங்குடி டாக்டர் க.அருள்மணி, கோவில்பட்டி கோ.ராமச்சந்திரன், அணைக்கட்டு எம்.கலையரசு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.


பா.ம.க. சார்பில் போட்டியிடும் 3வது பட்டியல் நேற்று மாலை வெளியிடப்பட்டது.


திருப்போரூர் திருக்கச்சூர் கி.ஆறுமுகம், போளூர் கோ.எதிரொலி மணியன், ஆர்க்காடு கே.எல். இளவழகன், ஜோலார்பேட்டை கோ.பொன்னுசாமி, செங்கல்பட்டு வ.கோ. ரங்கசாமி, மதுரவாயல் கி. செல்வம் ஆகியோர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


மீதமுள்ள சட்டப்பேரவை தொகுதிகளுக்கான பா.ம.க. வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்று பா.ம.க. மாநில தலைவர் ஜி.கே.மணி தெரிவித்திருந்தார்.


அதன்படி இன்று இரண்டு தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

பாலக்கோடு தொகுதியில் பாடி செல்வன் போட்டியிடுவார் என்றும், தர்மபுரி தொகுதியில் பி.சாந்தமூர்த்தி போட்டியிடுவார் என்றும் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து பவானி தொகுதியில் மகேந்திரன், ஓமலூர் தொகுதியில் தமிழரசு, புவனகிரி தொகுதியில் அறிவுச்செல்வன், பூம்புகார் தொகுதியில் அகோரம், பரமத்திவேலூர் தொகுதியில் வடிவேல் கவுண்டர், செஞ்சி தொகுதியில் கணேஷ் குமார் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

30 தொகுதிகளை வாங்கிக்கொண்டு ராமதாஸ் அவர்கள் சிறுபான்மை மக்களுகாக பாடுபடுகிறேன் என்பவர் முஸ்லிம் சமுதாயத்தில் உள்ள வேட்பாளருக்கு ஒரு இடம் கொடுக்க வக்கில்லையே ?

கருத்துகள் இல்லை: