வெள்ளி, ஏப்ரல் 08, 2011

உஸாமா பின்லேடனின் மகனை வெள்ளை மாளிகைக்கு அழைத்த ஜார்ஜ் W புஷ்


அல்காயிதா தலைவர் உஸாமா பின் லேடனை சிக்கவைக்கும் கடைசி முயற்சியாக அவருடைய  மகன் உமரை முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் W புஷ் வெள்ளை மாளிகைக்கு அழைத்துள்ள செய்தி வெளியாகியுள்ளது.தனது பதவிகாலத்தின் இறுதிப் பகுதியில் புஷ் உமரை வெள்ளைமாளிகைக்கு அழைத்துள்ளார்.
தோஹாவில் வசித்துவரும் உஸாமா பின் லேடனின் நான்காவது மகனான உமரை 2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஜார்ஜ் புஷ் வெள்ளை மாளிகைக்கு அழைத்துள்ளார்.

இதுக்குறித்து ஸ்பெயின் நாட்டு பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் உமர் கூறியிருப்பதாவது:என்னை பாதுகாப்பதாக அவர்கள் வாக்குறுதி அளித்தனர்.அதற்கு பதிலாக எனது தந்தையை கண்டுபிடிக்க நான் உதவ வேண்டுமென கோரினர்.நான் எனது தந்தையை மதிக்கக்கூடியவன்.அவரை காட்டிக்கொடுக்க நான் தயாரில்லை என அவர்களிடம் தெரிவித்துவிட்டேன்’ என உமர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: