சனி, டிசம்பர் 31, 2011

‘தானே’ புயலின் கோரத்தாண்டவம் 30-க்கும் மேற்பட்டோர் பலி


தானே’ புயலின் கோரத்தாண்டவத்தில் சின்னாபின்னமானது  புதுச்சேரி மாநிலம் மற்றும் கடலூர் மாவட்டம். மிக மோசமாக தாக்கிய புயலுக்கு மொத்தம் 30 மேற்பட்டோர் பலியாகி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று காலை 6.00 மணி முதல் 7:30 மணி வரை தானே புயல் புதுவைக்கும் கடலூருக்கும் இடையே கரையை கடந்தது.

சுமார் 140 கி.மீ. வேகத்தில் வீசிய தானே புயலால் சாலைகள் துண்டிக்கப்பட்டன. ராட்சத மரங்கள் வேரோடு சாய்ந்தன. நூற்றுக்கணக்கான படகுகள் நொறுங்கின. புதுவை மாநிலத்தின் சாலைகள் எல்லாம் அலங்கோலமாயின. நேற்றிரவு முதல் மின்சாரம் இல்லாததால் குடிநீர் சப்ளையும் தடைபட்டுள்ளது. புயலால் புதுச்சேரியில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. செல்போன் கோபுரங்கள் சேதமடைந்ததால் பல பகுதிகளில் செல்போன் இணைப்புகளும் இதர தொலைத்தொடர்பு இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன.

சூறாவளி காற்று காரணமாக கடல் பல மீட்டர் உயரத்துக்கு பொங்கி ஊர்களுக்குள் தண்ணீர் புகுந்தது.

சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் 20 ஆயிரம் குடிசைகள் முற்றிலும் சேதமடைந்தன. புயலால் தமிழ்நாட்டில் 26 பேரும் புதுச்சேரியில் 7 பேரும் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று இருமாநில முதல்வர்களும் அறிவித்துள்ளனர்.

படங்கள்: mypno

கருத்துகள் இல்லை: