வியாழன், டிசம்பர் 29, 2011

வீடு புகுந்து திருட முயற்சி : பிடிபட்ட நபருக்கு "தர்மஅடி'

வீடு புகுந்து திருட முயற்சி செய்த நபரை பொதுமக்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். திட்டக்குடி அடுத்த நிதிநத்தத்தைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. நேற்று முன்தினம் இரவு
இவர் வீட்டின் முன் கதவைத் திறக்கும் சத்தம் கேட்டு எழுந்து பார்த்த போது மர்ம நபர் ஓடுவதைக் கண்டு துரத்திச் சென்று பிடித்தார்.

உடன் அப்பகுதி மக்கள் ஒன்று கூடி அந்த நபரை பிடித்து கட்டி வைத்து தர்ம அடி கொடுத்து ஆவினங்குடி போலீசில் ஒப்படைத்தனர். விசாரணையில், பெண்ணாடம் அடுத்த அருகேரியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் முத்துராஜா, 29 என தெரிய வந்தது. இது குறித்து சப் இன்ஸ்பெக்டர் குமார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.

கருத்துகள் இல்லை: