ஞாயிறு, மார்ச் 27, 2011

ஜோர்டான்:எதிர்ப்பாளர்கள் 2 பேர் படுகொலை

தலைநகரில் முகாமிட்டிருந்த எதிர்ப்பாளர்கள் மீது அரசு ஆதரவாளர்களும், கலவரத்தடுப்பு போலீசாரும் நடத்திய தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.

பல மணிநேரம் நீண்ட மோதலில் போலீஸ்காரர்கள் உள்பட 100க்கும் மேற்பட்டோருக்கு காயமேற்பட்டது. போராட்டம் நடத்திய மாணவர்களின் முகாமை நேற்று முன்தினம் போலீஸ் சேதப்படுத்தியது.


அரசியல் மாற்றத்தைக்கோரி 2000க்கும் மேற்பட்ட எதிர்ப்பாளர்கள் தலைநகரான அம்மானில் திரண்டுள்ளனர். 200க்கும் மேற்பட்ட அரசு ஆதரவாளர்கள் கல்வீச்சில் ஈடுபட்டதைத் தொடர்ந்து மோதல் உருவானது. அமைதியாக திரண்டவர்கள் மீது தாக்குதல் நடத்தி அழித்துவிட முடியாது என எதிர்ப்பாளர்கள் தெரிவித்தனர்.

மோதலுக்கு பின்னணியில் இஸ்லாமிய அமைப்புகள் உள்ளதாக பிரதமர் மஹ்ரூஃப் அல் பாகித் குற்றஞ்சாட்டுகிறார். இத்தகையோர் பலனை அனுபவிக்க வேண்டிய சூழல் ஏற்படுமென அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: