செவ்வாய், மார்ச் 22, 2011

இந்திய முஸ்லீம்கள் மீது எனக்கு பகைமை இல்லை: பால் தாக்கரே

   இந்திய முஸ்லீம்கள் மீது தனக்கு பகைமை உணர்வு கிடையாது என்று சிவசேனை தலைவர் பால் தாக்கரே கூறியுள்ளார்.         
மீது தனக்கு பகைமை உணர்வு கிடையாது என்று சிவசேனை தலைவர் பால் தாக்கரே கூறியுள்ளார். 
                                                                                                                                           

சிவசேனையின் கட்சிப் பத்திரிகையான "சாம்னா"வில் இன்று வெளியாகியுள்ள அவரது பேட்டியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

"இந்தியாவில் பல தலைமுறைகளாக வாழும் முஸ்லீம்கள் மீது எனக்கு எந்தவித பகைமையும் கிடையாது. அவர்கள் மீது நான் எந்த புகாரையும் கூறமாட்டேன். ஆனால் வெளிநாட்டில் இருந்து வந்து, இங்கு பிரச்னைகளை உருவாக்குபவர்களையே நான் எதிர்க்கிறேன். அப்படிப்பட்டவர்கள் இங்கிருந்து வெளியேற்றப்பட வேண்டும்." என்று பால் தாக்கரே கூறியுள்ளார்.

"வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்குள் நுழைபவர்கள் இங்குள்ள முஸ்லீம்களின் மனதை கெடுக்கின்றனர். மகாராஷ்டிரத்தில் கொங்கண் பகுதிக்கு வந்துள்ள வெளிநாட்டு முஸ்லீம்கள், அங்குள்ள கொங்கணி முஸ்லீம்களை தவறான பாதைக்கு வழிகாட்டுகின்றனர்." என்றும் தாக்கரே குற்றம்சாட்டியுள்ளார்.

வங்கதேசம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைபவர்கள் மீது தாக்கரே இவ்வாறு குற்றம்சாட்டியுள்ளார். வங்கதேசத்தைச் சேர்ந்த சுமார் ஒன்றரை கோடி பேர் இவ்வாறு இந்தியாயில் சட்டவிரோதமாக நுழைந்து வசித்து வருகின்றனர் என்று ஏற்கெனவே பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

கருத்துகள் இல்லை: