சொந்த கட்சி வேட்பாளரையே தாக்கும் விஜயகாந்த் ஒரு தலைவரா என, நடிகர் வடிவேலு கேள்வி எழுப்பியுள்ளார்.
தர்மபுரி சட்டமன்ற தொகுதியில் தேமுதிக சார்பில் பாஸ்கர் என்பவர் வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் திறந்த வேனில் பிரச்சாரம் செய்தார். அப்போது வேட்பாளர் பெயரை பாண்டியன் என விஜயகாந்த் உச்சரித்தார். இதனையடுத்து அந்த வேட்பாளர் தனது பெயரை பாஸ்கர் என கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த விஜயகாந்த், அந்த இடத்திலேயே பாஸ்கரை சரமாரியாக அடித்தார். பெயரை மாற்றி சொன்னதை சுட்டிக்காட்டிய வேட்பாளரை விஜயகாந்த் தாக்கியதால் அந்த இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சொந்தக் கட்சி வேட்பாளரையே விஜயகாந்த் அடித்தது அக்கட்சியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் பல்லாவரம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தா.மோ.அன்பரசனை ஆதரித்து நடிகர் வடிவேலு பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய வடிவேலு,
தர்புரியில் விஜயகாந்த் கட்சி வேட்பாளர் பெயர் பாஸ்கர். பாஸ்கர் அவர்களுக்கு ஓட்டு போடுங்கள் என்று சொல்லுவதற்கு பதிலாக, வேட்பாளர் பாண்டியன் அவர்களுக்கு ஓட்டு போடுங்கள் என விஜயகாந்த் சொல்லியிருக்கிறார். எத்தனாவது ரவுண்டில் அவர் இருந்தார் என்று தெரியவில்லை. (பலத்த கைதட்டல்)
உடனே கூட இருந்த வேட்பாளர், என் பெயர் பாண்டியன் இல்ல அண்ணே, பாஸ்கர் என்று கூறியுள்ளார். ஜனங்க கூடியிருக்காக அவங்களுக்கு முன்னாடி ஒரே அடி. வேட்பாளரை அடிச்சிருக்கிறார். வேட்பாளரை அடிக்கலாமா. நீ தண்ணிய போட்டு உளறியிருக்க. வேட்பாளர் தன்னுடைய பெயரை எடுத்துச் சொல்றாரு. திருப்பி அடித்திருக்கிறார். அடிச்ச அடியில வேட்பாளரின் ரெண்டு பல்லு விழுந்திருச்சி. அதை அப்படியே வேட்பாளர் முழுங்கிட்டாரு. வெளியே துப்பினால் வேட்பாளருக்கு அசிங்கம்.
அய்யோ இப்படிப்பட்ட தலைவன் கிட்ட சேர்ந்திருக்கிறோமே, ஓபனிங் எல்லாம் இவனுக்கிட்ட நல்லதான் இருக்கு. பினிசிங் சரியில்லையே என அங்கிருந்தவர்கள் பார்த்தார்கள். கருப்பு எம்ஜிஆருக்கு எப்படின்னா பில்டிங் ஸ்டார்ங். ஆனால் பேஸ் மட்டம் வீக். (பலத்த கைதட்டல்)
தவறை சுட்டிக்காட்டிதைக் கூட பொறுத்துக்கொள்ள முடியாதவர் எல்லாம் தலைவரா. இவர் பெரிய பெரிய பொறுப்புகளுக்கு ஆசைப்படலாமா. விருத்தாசலம் தொகுதி மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. மீண்டும் அங்கு நின்றால் தோற்றுவிடுவோம் என்ற பயத்தில் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிடுகிறார். இவ்வாறு வடிவேலு பேசினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக