செவ்வாய், மார்ச் 29, 2011

அனைத்து தரப்பினரும் என்னை ஏற்றுக் கொள்கின்றனர்:மூ.மு.க., வேட்பாளர் ஸ்ரீதர் வாண்டையார்

"அனைத்து தரப்பு மக்களும் என்னை ஏற்றுக்கொண்டு விட்டதால் எனது வெற்றிக்கு தடை இருக்காது'' என சிதம்பரம் மூ.மு.க., வேட்பாளர் ஸ்ரீதர் வாண்டையார் கூறினார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:கடந்த ஐந்து ஆண்டு தி.மு.க., ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இந்த தேர்தலில் அதைவிட கூடுதலாக மாணவர்களுக்கு லேப்டாப் உள்ளிட்ட அறிவிப்புகள் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது. அத்துடன் பா.ம.க., - வி.சி., - காங்., கட்சிகள் கூட்டணியில் இருப்பது அணிக்கு மிகப்பெரிய பலம்.சிதம்பரம் தொகுதி மக்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவேன். மக்களின் அத்தியாவசிய அடிப்படை தேவைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பேன்.


44 கோடி ரூபாயில் கொண்டு வரப்பட்டு நிறுத்தி வைத்துள்ள பாதாள சாக்கடைத் திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுப்பேன்.சிதம்பரத்தில் ஏழை, எளிய மாணவிகள் படிப்பதற்காக தொகுதியில் அரசு மகளிர் கல்லூரி கொண்டு வருவேன்.

மின் மயானம் கொண்டுவருவேன்.சிதம்பரம் பகுதி ஆண்டுதோறும் கடுமையான வெள்ள பாதிப்பை சந்தித்துவரும் நிலையை மாற்ற அனைத்து வடிகால் வாய்க்கால்களை சீரமைப்பேன்.சிதம்பரம் ரயில்வே மேம்பாலத்தில் விபத்துக்களை தடுக்க ரவுண்டான அமைக்கப்படும். தொகுதி மக்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்ப டுத்தி கொடுக்கும் வகையில் இங்குள்ள மூலப்பொருட்களை வைத்து பொருட்கள் உற்பத்தி செய்யும் வகையிலான தொழிற்சாலைகள் கொண் டுவர முயற்சிப்பேன். 

தொகுதி மக்கள் எந்த நேரத்திலும் என்னை சந்தித்து தங்கள் குறைகளை சொல்லலாம்.அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில் தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சியினரின் ஒத்துழைப்பால் எனது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.இவ்வாறு ஸ்ரீதர் வாண்டையார் கூறினார்.

கருத்துகள் இல்லை: