பா.ஜ.கவின் ஹிந்து தேசியம் என்பது வாக்கு வங்கிக்கான சந்தர்ப்பவாதம் மட்டுமே என மூத்த பா.ஜ.க தலைவர் அருண் ஜெட்லி கூறியதாக விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள அமெரிக்க தூதரக கம்பிவட(கேபிள்) செய்தி கூறுகிறது.
2005 ஆம் ஆண்டு மே மாதம் அருண் ஜெட்லி அமெரிக்க தூதரக அதிகாரி ராபர்ட் ப்ளேக்கிடம் நடத்திய உரையாடலில் இதனை தெரிவித்துள்ளார்.
விக்கிலீக்ஸ் ‘தி ஹிந்து’ பத்திரிகை வழியாக வெளியிட்டு வரும் செய்திகள் ஐக்கிய முற்போக்கு கூட்டணியை தொடந்து பா.ஜ.கவிற்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் உறவு மேம்பட்டுள்ளதால் டெல்லி உள்ளிட்ட இடங்களில் தற்போது ஹிந்து தேசியவாதத்திற்கு போதிய அரசியல் முக்கியத்துவம் இல்லை. ஆனால், பங்களாதேஷ் குடியேற்றம் நடைபெறும் வடகிழக்கு பிரதேசங்களில் ஹிந்து தேசியவாதம் நல்லதொரு விஷயமாகும்.
பாராளுமன்ற தாக்குதலைப்போல் பாகிஸ்தானிலிருந்து எல்லைத் தாண்டிய ஒரு தீவிரவாத தாக்குதல் நடந்தால் ஹிந்து தேசியவாதம் நாட்டில் தீவிரமடையும் என ஜெட்லி கூறியுள்ளார்.
அருண் ஜெட்லியின் இக்கூற்று,பாராளுமன்றத் தாக்குதல் மற்றும் மும்பை தீவிரவாதத் தாக்குதல் ஆகியன பா.ஜ.கவுக்கு தெரிந்தே நடந்ததா? என்ற சந்தேகம் வலுவடைந்துள்ளது.
அரசியல் அதிகாரத்தைப் பெற எதனையும் செய்ய தயாரான கூட்டம்தான் பா.ஜ.க மற்றும் சங்க்பரிவார் என்பது அருண் ஜெட்லியின் கூற்று உறுதிப்படுத்துகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக