கெய்ரோ:எகிப்தின் முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக்கும் அவரது குடும்பத்தாரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த திங்கட்கிழமையன்று முபாரக்கின் குடும்பம் சவூதி அரேபியா சென்றுவிட்டதாக வந்த தகவலையடுத்து ராணுவ அதிகாரிகள் இத்தகவலை தெரிவித்துள்ளனர்.
எகிப்திலுள்ள ராணுவ ஆட்சியாளர்கள் பேஸ்புக்கில் தெரிவிக்கையில், முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரக் எகிப்திலிருந்து சவூதியிலுள்ள தபுக்கிற்கு சென்றுவிட்டதாக வந்த தகவல் உண்மையல்ல என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் ஹோஸ்னி முபாரக் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கடந்த மார்ச் 3ம் தேதி முபாரக் சவூதி செல்லவில்லை, சலாம்-இ- ஷேய்க்கில் தனது வீட்டில் உள்ளார் என எகிப்தின் தலைமை வழக்குரைஞர் தெரிவித்திருந்தார்.
ஆனால் அல்-அக்பர் என்ற தினசரிப் பத்திரிக்கை முபாரக் தனது கேன்சர் வியாதிக்காக சவூதியிலுள்ள தபுக்கில் சிகிச்சைப் பெற்று வருகிறார் என தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக