சிமி இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் எனக் குற்றஞ்சாட்டி கைது செய்யப்பட்டுள்ள முஸ்லிம் இளைஞர்களின் சிறைவாசம் மூன்று ஆண்டுகளை தாண்டிவிட்டது.
கடந்த 2008 மார்ச் 26-ஆம் தேதி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரிலிருந்து கேரளாவைச் சார்ந்த முஸ்லிம் இளைஞர்களை கைது செய்துள்ளதாக போலீஸ் தெரிவித்தது. இவர்களை கைது செய்த பிறகு ஐந்து மாநிலங்களில் ஏராளமான வழக்குகளில் இவர்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டார்கள்.
இவர்களை கைது செய்த பிறகு நடந்த குண்டுவெடிப்பு வழக்குகளிலும் குற்றவாளிகளாக
சேர்த்தனர். பல்வேறு வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்ட கேரளாவை சார்ந்த 5 பேர் உள்பட 66 பேர் சபர்மதி சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். கேரளாவைச் சார்ந்த ஒருநபர் குல்பர்க் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.கடந்த 2008 மார்ச் 26-ஆம் தேதி மத்தியபிரதேச மாநிலம் இந்தூரிலிருந்து கேரளாவைச் சார்ந்த முஸ்லிம் இளைஞர்களை கைது செய்துள்ளதாக போலீஸ் தெரிவித்தது. இவர்களை கைது செய்த பிறகு ஐந்து மாநிலங்களில் ஏராளமான வழக்குகளில் இவர்கள் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டார்கள்.
இவர்களை கைது செய்த பிறகு நடந்த குண்டுவெடிப்பு வழக்குகளிலும் குற்றவாளிகளாக
குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்ட கர்நாடகா மாநிலம் ஹுப்ளி வழக்கில் நான்கு மாதங்களில் 12 சாட்சிகள் மட்டுமே விசாரிக்கப்பட்டுள்ளனர். இவ்வழக்கில் மொத்தம் 351 சாட்சிகள் உள்ளனர்.
கடந்த 23,24 தேதிகளில் கடைசி சாட்சி விசாரணை நிர்ணயிக்கப்பட்டிருந்தது. 23-ஆம் தேதி ஹோலிப் பண்டிகை விடுமுறை தினமானதால் விசாரணை நடைபெறவில்லை. 24-ஆம் தேதி ஆஜராக வேண்டிய சாட்சிகளுக்கு சம்மன் கூட கிடைக்கவில்லை.
இதன் காரணமாக 24-ஆம் தேதி ஒருவர் மட்டுமே விசாரிக்கப்பட்டார். கைது செய்யப்பட்டு இரண்டு மாதம் கழிந்த பிறகு, 2008 மே மாதம் பதிவுச் செய்யப்பட்ட ஹூப்ளி வழக்கில் இளைஞர்களுக்கு எதிரான குற்றப்பத்திரிகை ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்டது.
இவ்வழக்கில் 17 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்திலுள்ள வழக்குகளை அம்மாநிலத்திற்கு வெளியே வைத்து விசாரிக்க வேண்டுமென இளைஞர்கள் உச்சநீதிமன்றத்தில் அளித்துள்ள மனுவின் மீதான எதிர்தரப்பு வாதம் கடந்த 8-ஆம் தேதி பூர்த்தியானது.
குஜராத் அரசின் வாதம் 10-ஆம் தேதி நிர்ணயித்திருந்த போதும் 29-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
குஜராத் வழக்கு விசாரணை முடியாமல் வெளிமாநிலங்களுக்கு கொண்டு செல்வதை தடைச் செய்யும் சட்டமும் இவர்கள் மீது சுமத்தப்பட்டிருப்பதால் இதர மாநிலங்களிலுள்ள வழக்குகள் கால வரையில்லாமல் நீளுகின்றன. இதன்மூலம் ஹூப்ளி வழக்கில் குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டு பல மாதங்களுக்குப் பிறகு வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலமாக நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அஹ்மதாபாத் குண்டுவெடிப்பு தொடர்பான 20 வழக்குகளும், சூரத்தில் 13 வழக்குகளும் இவர்களின் மீது சுமத்தப்பட்டுள்ளது. அஹ்மதாபாத், சூரத் வழக்குகளில் ஒரேயொரு வழக்கில் மட்டுமே இதுவரை குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
கேரளாவைச் சார்ந்த சகோதரர்களான ஷாதுலி, ஷிப்லி, அன்ஸார் நத்வி ஆகியோர் உள்பட 17 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ள இந்தூர் வழக்கில் வீடியோ கான்ஃப்ரன்ஸ் அமைப்பை ஏற்படுத்த தீர்மானித்திருந்த பொழுதிலும் அதுத் தொடர்பான நடவடிக்கைகள் பூர்த்தியாகவில்லை. இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தயாராகி பல மாதங்கள் கழிந்த பிறகும் குற்றஞ்சாட்டப்பட்டோரின் பட்டியல் பிரிக்கப்பட்டு விசாரணை துவங்கியுள்ளது.
இந்தூர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நான்கு பேரை மட்டுமே குற்றப்பத்திரிகையை வாசித்து காண்பித்து தொடர் நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ளன.
கேரளாவைச் சார்ந்த முஸ்லிம் இளைஞர்களை இந்தூரிலிருந்து கைது செய்திருந்தாலும், பின்னர் பல்வேறு மாநிலங்களிடம் ஒப்படைத்தது மூலமாக இவ்வழக்கை நடத்துவது காலவரையற்று நீளுகிறது. இவ்வழக்கில் விசாரணையை விரைவில் பூர்த்தியாக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தூரில் வழக்கு விசாரணையின் நேர் எதிராக கர்நாடகாவில் நீதிமன்ற நடவடிக்கைகள் அமைந்துள்ளன. அங்கு குற்றஞ்சாட்டப்பட்டோரெல்லாம் சிறையில் உள்ளதால் குற்றஞ்சாட்டப்பட்டோரின் பட்டியலை பிரிக்க முடியாது எனக்கூறி வீடியோ கான்ஃப்ரன்சிங் மூலம் விசாரணைத் துவங்கியது.
கேரளாவைச் சார்ந்த ஐந்து முஸ்லிம் இளைஞர்கள் உள்பட 43 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ள வாகமன் வழக்கில் கடந்த 24-ஆம் தேதி ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தாலும் மாநிலத்திற்கு வெளியே கொண்டு செல்ல அனுமதிக்கக் கூடாது என்ற சட்டப் பிரிவின் மூலம் குற்றவாளிகள் பட்டியலில் இடம் பெற்றவர்களை ஆஜர்படுத்த இயலவில்லை. மே 13-ஆம் தேதி இவர்களை ஆஜர்படுத்த மீண்டும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக