திங்கள், மார்ச் 28, 2011

லிபியாவில் புரட்சி வெல்லும் – எதிர்ப்பாளர்கள் தலைவர் தேஜஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டி

கத்தாஃபியின் மோசமான ஆட்சிக்கெதிராக லிபியா மக்கள் நடத்திவரும் போராட்டம் வெற்றிப் பெறுமென எதிர்ப்பாளர்களின் தலைவர்களில் ஒருவரான டாக்டர்.அலி ஸல்லாபி தேஜஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது:”லிபியாவில் அனைத்து பிரிவைச் சார்ந்த மக்களும் அரசுக்கெதிரான போராட்டத்தில் பங்கேற்கிறார்கள். பல கோத்திரங்களிலிருந்து வந்த இளைஞர்கள் தற்பொழுது போராட்டத்தை வழி நடத்துகிறார்கள். ஆதலால், ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டதைப் போன்று புரட்சிக்கு பிறகு உள்நாட்டுக் குழப்பம் ஏற்பட வாய்ப்பில்லை.


புரட்சியாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள நகரங்களில் அராஜகங்கள் இல்லை. சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட நீதிபதிகள், போலீஸ் தலைவர்கள், ஜெனரல்கள், சமூக சேவகர்கள் ஆகியோர் அடங்கிய கவுன்சில்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

தற்போதைய சூழலின் இயற்கையான பரிணாமம்தான் வெளிநாடுகளின் தலையீடாகும். ஆனால், வெளிநாட்டினரின் கணக்கீடுகளெல்லாம் லிபியாவில் வெற்றிப் பெறாது.ஏனெனில் நாங்கள் உமர் முக்தாரின் சந்ததிகளாவர்.” இவ்வாறு டாக்டர் அலி ஸல்லாபி தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: