அஸ்ஸாம் மாநிலத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தல் முதல் கட்ட வாக்குப் பதிவில் 66.24 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. இந்த சதவீதத்தில் மாற்றம் வரலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வாக்குப்பதிவின் உண்மை நிலவரம் இன்று (செவ்வாய்க்கிழமை) தெரியவரும். வாக்குப்பதிவு அமைதியாக நடந்தது. இரண்டு வாக்குச் சாவடிகளில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்தப்படும்.
126 உறுப்பினர்களைக் கொண்ட அஸ்ஸாம் சட்டசபைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு 62 தொகுதிகளில் நடைபெற்றது.
இத்தொகுதிகளில் 485 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் 38 பேர் பெண்களாவர்.முதல் கட்டமாக நடந்த வாக்குப்பதிவு நடந்த தொகுதிகளில் முதல்வர் தருண் கோகாய் உள்ளிட்ட பிரமுகர்கள் போட்டியிடுகின்றனர்.
அஸ்ஸாமில் காங்கிரஸ் கட்சி ஹாட்ரிக் வெற்றிப் பெற்று ஆட்சியில் தொடரும் என வாக்குப்பதிவுச் செய்துவிட்டு பேட்டியளித்த தருண் கோகாய் தெரிவித்தார்.
காலை ஏழு மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு பிற்பகல் மூன்று மணிக்கு முடிவடைந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக