திங்கள், ஏப்ரல் 11, 2011

அன்னா ஹஸாரேவின் போராட்டத்தை ஹைஜாக் செய்ய முயன்ற ஆர்.எஸ்.எஸ்


:லோக்பால் மசோதா தொடர்பாக காந்தியவாதியும் சமூக ஆர்வலருமான அன்னா ஹஸாரேவின் ஜந்தர் மந்தர் போராட்டம் வெற்றிப்பெற்ற போதிலும் அவருடைய போராட்ட மேடையில் நிறைந்திருந்தது ஹிந்துத்துவாதிகளின் கூட்டமாகும்.
அன்னா ஹஸாரேவின் போராட்டத்தை ஆர்.எஸ்.எஸ்ஸின் கட்டுக்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகள் துவக்கம் முதலே நடந்தது. மேடையை அலங்கரித்திருந்தது ஹிந்துத்துவா வாதிகளின் சின்னங்களும், முழக்கங்களுமாகும்.

போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வந்த மனித உரிமை ஆர்வலர்களும், இடதுசாரி புத்திஜீவிகளும் இவ்விஷயத்தில் அதிருப்தியடைந்தனர். இதனைத் தொடந்து போராட்ட அமைப்பாளர்கள் சில ஹிந்துத்துவா ஆதரவு புகைப்படங்களை மேடையிலிருந்து நீக்கினர்.
ஆர்.எஸ்.எஸ் அன்னா ஹஸாரேவின் போராட்டத்தை முற்றிலுமாக ஹைஜாக் செய்ய முயன்ற முயற்சியை அறிந்துகொண்ட மத்திய அரசு உடனடியாக இப்பிரச்சனைக்கு தீர்வு காண முயன்றது.
போராட்டத்தின் துவக்கத்தில் போராட்ட மேடையில் அபூர்வமாக ஒரு சில காந்தியின் படங்களே காணப்பட்டன. ஜந்தர் மந்தர் போராட்ட மேடையில் நிறைந்திருந்தது ஆர்.எஸ்.எஸ் சிந்தனையாளரும் யோக கலை வல்லுநருமான பாபா ராம்தேவின் புகைப்படங்களே பந்தலை அலங்கரித்திருந்ததது.
மேடையில் ஹஸாரேவுக்கு பின்னால் வைத்திருந்த இந்திய வரைபடத்தில் பூமிதேவி கொடியை பிடித்துக் கொண்டிருக்கும் படம் இடம்பெற்றிருந்தது. இது ஆர்.எஸ்.எஸ்ஸின் பொதுக்கூட்டங்களில் வழக்கமாக பயன்படுத்துவதாகும். ஒரு வித்தியாசம் என்னவெனில், பாரதமாதாவின் கையில் காவிக்கொடிக்கு பதிலாக தேசிய கொடி இருந்தது. ஆர்.எஸ்.எஸ் போற்றும் விவேகானந்தரின் படங்களும் மேடையில் நிறைந்திருந்த பொழுது இந்தியாவின் தேசபிதா காந்தியடிகளின் படங்கள் குறைவாகவே காணப்பட்டன.
பிரசாந்த் பூஷன் போன்ற நடுநிலையாளர்கள் போராட்டக்களத்தின் முன்னணியில் இருந்தபோதும் ஆர்.எஸ்.எஸ்ஸின் முழக்கங்களான வந்தே மாதரம், பாரத் மாதா கீ ஜெய், ஜெய் பாரதா மாதா போன்ற முழக்கங்கள்தாம் போராட்டப் பந்தலில் கடந்த ஐந்து தினங்களாக முழக்கப்பட்டன.
சோனியாகாந்தி இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்ற ஆர்.எஸ்.எஸ்ஸின் கோஷங்கள் அடங்கிய பாட்ஜ்களை சிலர் அணிந்திருந்தனர். போராட்டத்தின் துவக்கத்திலேயே மக்கள் அதிகமாக திரண்டதிலும் மர்மம் நீடிக்கிறது.
போராட்டத்தில் கலந்துக் கொண்டவர்களில் பெரும்பாலோர் பாபா ராம்தேவின் ஆதரவாளர்களும் ஆர்.எஸ்.எஸ்ஸின் செல்வாக்கு மிகுந்த நகரங்களிலுள்ள அரசியல் சாரா மத்திய வர்க்கத்தினருமாகும். எதிர்பாராத ஊடக ஆதரவும் இந்த போராட்டத்திற்கு கிடைத்தது. ஒரு குறிப்பிட்ட செயல்திட்டத்தை முன்வைத்து ஜந்தர் மந்தரில் காட்சி ஊடகங்கள் ஜந்தர் மந்தரில் காத்து நின்றன.
ஹஸாரேவின் போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்க ஆர்.எஸ்.எஸ் ஏற்கனவே தனது தொண்டர்களுக்கு உத்தரவிட்டிருந்தது. வெள்ளிக்கிழமை இவ்விஷயம் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து அன்னா ஹஸாரேவுக்கு ஆர்.எஸ்.எஸ் பொதுச்செயலாளர் சுரேஷ் ஜோஷி கடிதம் எழுதினார். இக்கடிதத்தை போராட்ட மேடையில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் ராம் மாதவ் ஹஸாரேவிடம் அளித்தார்.
போராட்ட மேடையில் அரசியல்வாதிகளை அனுமதிக்கமாட்டேன் எனக்கூறிய அன்னா ஹஸாரேவுக்கு ஆர்.எஸ்.எஸ் தலைவர் ராம் மாதவை வரவேற்பதில் எந்த தயக்கமும் இருக்கவில்லை. ஆர்.எஸ்.எஸ் தொண்டர்களும், ஆதரவாளர்களும் போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்பதாக ஹஸாரேவுக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாக ராம்தேவ் தெரிவித்திருந்தார்.
ஆர்.எஸ்.எஸ்ஸின் கோ ரக்‌ஷா(பசு பாதுகாப்பு) யாத்திரையில் யோகா வகுப்புகளை நடத்தியிருந்த பாபா ராம்தேவ் போராட்ட பந்தலிலும் யோகா வகுப்புகளை நடத்தினார். ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் தன்னை முன்னிறுத்தும் இந்த பாபா ராம்தேவ் பத்து ஆண்டுகளுக்கு முன்னால் சைக்கிளில் சுற்றித் திரிந்தவர். இன்று ஹெலிகாப்டரில் பறந்துக் கொண்டிருக்கின்றார். யோகா கலை என்ற பெயரால் மக்களை ஏமாற்றி ஆன்மீக ரீதியாக ஊழல் புரிந்து கோடிகோடியாக சம்பாதித்து வருபவர். இத்தகைய கபடவேடதாரிகள்தாம் ஊழலுக்கு எதிராக போராடுகிறார்களாம்.
இந்தியாவின் தேசத்தந்தை காந்தியை கொலைச்செய்த பயங்கரவாத கும்பலுக்கு ஊழலை குறித்து பேச என்ன அருகதை இருக்கிறது. இவர்களது அரசியல் முகமூடியான பா.ஜ.க ஆட்சியில் ஊழல கரைபுரண்டோடியது. கார்கில் போரில் இந்தியாவுக்காக உயிர்நீத்த ராணுவ வீரர்களின் சடலங்களை கொண்டுசெல்ல வாங்கிய சவப்பெட்டிகளில் ஊழல் புரிந்த இந்த கயவர்கள் கூட்டம் இன்று ஊழலுக்கெதிரான நாடகத்தை ஆடிக்கொண்டிருக்கிறது.
காந்தியடிகளைக் கொலைச்செய்த கும்பலுடன் அன்னா ஹஸாரே தொடர்பு வைத்தால் அது காந்தியடிகளுக்கு மட்டுமல்ல இந்திய தேசத்துக்கே செய்யும் துரோகமாகும்.

கருத்துகள் இல்லை: