சனி, ஏப்ரல் 16, 2011

பிரான்சின் புர்கா தடைக்கு தேவ்பந்த் கண்டனம்

பிரான்சின் புர்கா தடையை ஜனநாயகம் மற்றும் மதச்சார்பின்மைக்கு எதிரானது என தாருல் உலூம் தேவ்பந்த் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்திய அரசு பிரான்சின் புர்கா தடைக்கு எதிராக குரலெழுப்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.


பிரான்சின் புர்கா தடைக்கு தாருல் உலூம் தேவ்பந்த் மதரசா எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. தேவ்பந்தின் தற்காலிக துணைவேந்தர் மௌலானா அபுல் கஸ்மி பானர்சி  மற்றும்  துணை துணைவேந்தர் அப்துல் கலிக் மட்ரசி ஆகியோர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது; ‘பெண்கள் தங்களுடைய தலையை மறைப்பது இஸ்லாத்தில் ஒரு பகுதியாகும். அதற்கு தடை விதிப்பது உரிமை மறுப்பாகும் என தரிவிதுள்ளனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில் இந்திய அரசு இந்த தடைக்கு எதிராக சர்வேதேச அளவில் குரலெழுப்ப வேண்டும்.’ என்றனர்.

பிரான்ஸ் தான் ஐரோப்பாவில் முதன் முறையாக புர்காவை தடை செய்த நாடாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: