ஆப்கானிஸ்தானின் வட-கிழக்கு மாகாணத்தில் தாலிபான் புரட்சியாளர்கள் அப்பகுதியின் காவல்காரர்களின் தடையை மீறி திடீர் என்று அதிரடி கிளர்ச்சியை ஏற்படுத்தியதாக அப்பகுதியின் உயர் காவல் அதிகாரி ஷம்சுர் ரஹ்மான் ஜாகித் தெரிவித்தார். அங்கே நடந்தவைகளைப் பின்வருமாறு விளக்குகிறார்.
“300க்கும் மேற்பட்ட ஆயுதம் ஏந்திய தாலிபான் புரட்சியாளர்கள் ஆப்கானிஸ்தானின் வேஹல்
மாவட்டத்தை கடந்த செவ்வாய் அன்று பலத்த முறையில் தாக்கி ஆப்கானிஸ்தானின் முக்கிய நகரங்களில் ஒன்றான ஷம்சுல் நகரை சூழ்ந்தனர். எங்களிடம் அவர்களை எதிர்கொள்ளப் போதுமான அளவு ஆட்களோ அல்லது ஆயுதங்களோ இல்லாததால் தடுக்க முடியாத சூழ்நிலைக்கு ஆளாக்கப்பட்டோம்.அப்பகுதியில் வெளிநாட்டுப் படைவீரர்களோ அல்லது ஆப்கானிஸ்தானின் படைவீரர்களோ இல்லாததால், அப்பகுதியில் உள்ள காவல் அதிகாரிகள் இங்கும் அங்குமாக கிராமப் பகுதிக்குள் சிதறி ஓடி அம்மாவட்டத்தைச் சூழ முயன்றனர், ஆனால் அதற்குள் தாலிபான் புரட்சியாளர்கள் அப்பகுதியின் அனைத்து சாலைகளையும் சூழ்ந்து மூடி விட்டனர்.” இவ்வாறு அவர் மிகவும் ஆதங்கத்தோடு தெரிவித்தார்.
தலிபான் சார்பாக செய்தியாளர்களுக்கு செய்தி அனுப்பிய ஷஃபியுல்லாஹ் முஜாஹித் அவர்கள் இந்தத் தாக்குதலில் 12 ஆயுதம் ஏந்திய காவலதிகாரிகளையும், 4 இராணுவ வாகனங்களையும் சேர்த்து மொத்தம் 19 வாகனங்களையும் கைபற்றியாதாகவும், காவல் அதிகாரிகள் மாவட்டத்தை சூழ்ந்தவுடன், தாலிபான் புரட்சியாளர்கள் கிளர்ச்சியை நிறுத்தும் வண்ணமாக மாவட்டத்தின் மத்திய பகுதியில் வெள்ளைக் கொடியை மேலே உயர்த்தியதாகவும் கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக