ஞாயிறு, ஏப்ரல் 17, 2011

ஃபலஸ்தீன் சிறைக் கைதிகளை சித்தரவதைச் செய்யும் காட்சிகள் அடங்கிய வீடியோவை வெளியிட்ட இஸ்ரேல் சேனல்


 ஃபலஸ்தீன் சிறைக் கைதிகளை இஸ்ரேல் ராணுவம் சித்தரவதைச் செய்யும் காட்சிகள் அடங்கிய வீடியோவை இஸ்ரேல் சேனலான 2 டி.வி நேற்று வெளியிட்டது.
நகாப் சிறையிலிருந்து கடந்த 2008-ஆம் ஆண்டிற்கு பிறகு படம் பிடிக்கப்பட்டுள்ளன இவ்வீடியோ காட்சிகள். சித்தரவதையின் இறுதியில் ஒருவர் கொல்லப்பட்டார். ஏராளமானோருக்கு காயமேற்பட்டது. இக்காட்சிகளைத்தான் இஸ்ரேலிய சேனல் வெளியிட்டதாக குத்ஸ்னா செய்தி ஏஜன்சி தெரிவிக்கிறது.

சிறைக் கைதிகளுக்கெதிராக கண்ணீர் புகைக் குண்டும், க்ரேனேடும் இஸ்ரேல் ராணுவம் பிரயோகித்தது. விசாரணை நடைபெறும் வேளையில் வழக்கறிஞருடன் பேசும் உரிமை சிறைக் கைதிகளுக்கு இஸ்ரேலிய ராணுவம் மறுப்பதாக மனித உரிமை அமைப்பான சித்தரவதைக்கு எதிரான பொது குழு கடந்த ஆண்டு வெளிப்படுத்தியிருந்தது.
நாற்காலி இல்லாமல் நீண்டநேரம் அமரச் செய்வது,தூங்குவதற்கு அனுமதியின்மை ஆகியன இஸ்ரேல் சிறைகளில் கைதிகள் நிரந்தரமாக அனுபவிக்கும் சித்தரவதைகளாகும். ஆனால் இஸ்ரேல் ராணுவம் இதனை மறுத்துள்ளது.

கருத்துகள் இல்லை: