அன்னா ஹஸாரே மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கு எஸ்.டி.பி.ஐ கண்டனம் தெரிவித்துள்ளது.போராட்டம் நடத்துவதற்கான ஜனநாயக உரிமைகளை மறுப்பதாகும் இந்நடவடிக்கை என எஸ்.டி.பி.ஐ குற்றம் சாட்டியுள்ளது.
இதுக்குறித்து சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:ஹஸாரேயும், அவரது ஆதரவாளர்களையும் கைதுச்செய்து திஹார் சிறையில் அடைத்த நடவடிக்கை அவசர காலக்கட்டத்தை நினைவுக்கூறுகிறது.ஊழலுக்கு எதிரான போராட்டத்தின் மீது காங்கிரஸ் தலைமையிலான அரசின் பொறுமையற்ற தன்மையை இது வெளிப்படுத்துகிறது.
அதேவேளையில் ஊழல் விவகாரத்தில் ஹஸாரேவுக்கு ஆதரவு அளித்துவரும் அரசியல் கட்சிகளின் நிலையும் இதுவேயாகும்.லோக்பால் விவகாரத்தில் அமைதியான, நல்லிணக்கத்தின் அடிப்படையிலான தீர்மானம் மேற்கொள்வதில் தடை ஏற்படுத்தும் நடவடிக்கைகளிலிருந்து அரசு விலகவேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக