ஒருவார கால முஸ்லிம் எதிர்ப்பு மோதல்களுக்கு பிறகு பித்தளை கைவினைப் பொருட்களுக்கு பிரசித்திப்பெற்ற முராதாபாத் நகரம் பீதியில் உறைந்துள்ளது.
உ.பி.போலீசாரும்,
பி.ஏ.சியும் செக்போஸ்டுகளை நிறுவி ரோந்து சுற்றி வந்தாலும் நோன்பு காலம் அமைதியின்றி கழிவதாக கவலையில் உள்ளனர் சாதாரண முஸ்லிம்களும், ஹிந்துக்களும். வழக்கம்போல கலவரத்திற்கு தீக்கொளுத்தியது ஹிந்து அமைப்புகளாகும்.
ரஹ்மத் நகரில் முஸ்லிம்கள் நெருங்கிவாழும் தெருக்கள் வழியாக மத கோஷயாத்திரை நடத்த சிவபக்தர்கள் முயன்றது மோதல்களுக்கு காரணமானது. ஆகஸ்ட் 7-ஆம் தேதி இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. வழக்கமாக ரஹ்மத் நகர் வழியாக செல்லாமல் சிவபக்தர்கள் இவ்வருடம் வழியை மாற்றி ஒருதலைபட்சமாக தீர்மானம் எடுத்துள்ளனர். சிவசேனா மற்றும் வி.ஹெச்.பியின் நிர்பந்தம் காரணமாக இம்முடிவு எடுக்கப்பட்டதாக உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
1960களில் பல வட இந்திய நகரங்களில் நிகழ்ந்ததுபோல திட்டமிட்டு சங்க்பரிவார பயங்கரவாதிகள் முராபாத் நகரத்தின் முஸ்லிம் பகுதிகளை தீயிட்டு கொளுத்தினர். நகரத்தில் முகல்புரா, நாக்ஃபானி, குல் ஸாஹித் உள்ளிட்ட பெரும்பாலான பிரதேசங்களிலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அரசு ஸ்பெஷல் இயக்குநர் ஜெனரல் பிரிஜ்பாலை முராதாபாத்திற்கு அனுப்பிய பிறகு ஹிந்துத்துவா பயங்கரவாதத்தின் தாக்குதலின் வேகம் குறைந்தது. ஐம்பதிற்கும் அதிகமான நபர்களை கைதுச் செய்தபிறகும் அவர்களில் கலவரத்திற்கு தலைமையேற்றவர்கள் உள்ளனரா என்பது உறுதிச் செய்யப்படவில்லை.
கடந்த ஜூலை 6-ஆம் தேதி அண்மைப் பிரதேசமான அராலத் நகரில் துவங்கிய கலவரம் முராதாபாத்தில் பரவியது. ஊரடங்கு உத்தரவு தளர்வு ஏற்படுத்தப்பட்ட போதிலும் நகரத்தில் எந்த நிமிடமும் குழப்பங்கள் மீண்டும் வெடித்துக் கிளம்பிவிடுமோ என அச்சம் நிலவுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக