கடந்த 21 ஆண்டுகளில் ஜம்முகஷ்மீரில் என்ன நிகழ்ந்தது என்பதை ஆராய கமிஷன் தேவை என முதல்வர் உமர் அப்துல்லாஹ் தெரிவித்துள்ளார்.
வடக்கு கஷ்மீரில் அடையாளப்படுத்தாத 38 கல்லறைகளில் 2156 அடையாளம் காணமுடியாத இறந்த உடல்களை மாநில மனித உரிமை கமிஷனின் புலனாய்வு குழு கண்டறிந்ததை தொடர்ந்து உமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ராணுவமும், பாதுகாப்பு படையினரும் எழுப்பும் கேள்விகளுக்கு பதில் அளிக்க கமிஷன் தேவை என அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால், கல்லறைகளில் கண்டெடுக்கப்பட்ட உடல்களை போர்க் குற்றங்களுக்கான ஐ.நாவின் தீர்ப்பாயத்தை கொண்டு விசாரணை நடத்தவேண்டுமென தெஹ்ரீக்-இ-ஹுர்ரியத் கட்சியின் தலைவர் செய்யத் அலிஷா கிலானி கோரிக்கை விடுத்துள்ளார்.
உண்மையை கண்டறிய கமிஷனை நியமிக்கவேண்டும் என்ற உமர் அப்துல்லாஹ்வின் கோரிக்கைக்கு கிலானி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஐ.நாவின் தீர்ப்பாயத்தையோ அல்லது சர்வதேச ஏஜன்சிகளோ இதனைக் குறித்து விசாரணை நடத்தவேண்டும் என அவர் தெரிவித்தார். கொலைக் குற்றங்களுக்கு காரணமானவர்களே விசாரணை நடத்தினால், அவ்விசாரணை நீதியாகவும், சுதந்திரமாகவும் அமையாது என கிலானி மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக