சனி, ஆகஸ்ட் 27, 2011

பிறந்தநாளில் சிறைக்கு வர நேர்ந்த முன்னாள் அமைச்சர்



முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தனது பிறந்த நாளில் சிறைச் சாலை வளாகத்துக்கு வரும் நிலை வியாழக்கிழமை ஏற்பட்டது.

 எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தனது பிறந்த நாளை முட்டத்தில் உள்ள தனது இல்லத்தில் வியாழக்கிழமை
 காலை எளிமையாக கொண்டாடினார். ஏராளமான தி.மு.க. நிர்வாகிகளும், தொண்டர்களும் அவரைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.  

  இந்நிலையில் திருச்சியில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு, கடலூர் மத்திய சிறைக்குக் கொண்டு வரப்படுவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கடலூர் மத்திய சிறைச்சாலை வளாகத்துக்கு விரைந்து வந்தார். நேருவை சந்தித்து நலம் விசாரித்தார்.  

 கே.என்.நேருவுக்கு மதிய உணவை கடலூர் தி.மு.க.வினர் வாங்கி வைத்திருந்தனர். கே.என். நேரு வந்ததும் அவரிடம் வழங்கி, வேனுக்கு வெளியில் அமர்ந்து சாப்பிடுமாறு கோரினர். அதற்கு அவர் மறுத்து விட்டார். வேனுக்கு வெளியில் நின்று சாப்பிட்டால், செய்தியாளர்கள் படம் பிடித்துப் போட்டு விடுவார்கள். இதனால் போலீஸôர் பாதிக்கப்படுவார்கள். அவர்களின் வேலை பறிபோய்விடும். நான் வேனுக்கு உள்ளேயே சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று கூறிவிட்டார் நேரு.

கருத்துகள் இல்லை: