வலுவான லோக்பால் மசோதாவுக்காக இன்று முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்த அன்னா ஹஸாரே இன்று திடீரென அவரது வீட்டில் வைத்து கைதுச் செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே ஹஸாரேவின் போராட்டத்திற்கு போலீஸார் அனுமதி மறுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஹஸாரே போராட்டத்தில் ஈடுபடுவதை தடுக்கும் விதத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அவர் கைதுச் செய்யப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.
ஹஸாரே குழுவைச் சார்ந்த அரவிந்த் கெஜ்ரவால் உள்ளிட்டோரும் கைதுச் செய்யப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது. ஹஸாரேவின் கைது பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. தான் கைதுச் செய்யப்பட்டாலும் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்வேன் என ஹஸாரே ஏற்கனவே அறிவித்திருந்தார். அன்னா ஹஸாரே உண்ணாவிரதப் போராட்டம் இருக்கப் போவதாக அறிவித்திருந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக