புதன், ஆகஸ்ட் 10, 2011

குஜராத் அரசின் சஸ்பென்சன் நடவடிக்கை எதிராக சஞ்சீவ் பட்

தன்னை சஸ்பெண்ட் செய்த குஜராத் அரசின் நடவடிக்கையை சட்டரீதியாக எதிர்கொள்ளப் போவதாக மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ்பட் தெரிவித்துள்ளார்.
குஜராத் முஸ்லிம் இனப் படுகொலை தொடர்பாக முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் அளித்ததற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக சஞ்சீவ் பட்டை குஜராத் அரசு சஸ்பெண்ட் செய்துள்ளது என அவருடைய வழக்கறிஞர் இக்பால் ஸைத் தெரிவித்துள்ளார்.
சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தையோ அல்லது மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தையோ அணுகப்போவதாக அவர் தெரிவித்தார்.
பணிக்கு வரவில்லை எனவும், அரசு வாகனத்தை துஷ்பிரயோகம் செய்வதாகவும் குற்றம் சாட்டி குஜராத்தின் மோடி அரசு நேற்று முன்தினம் சஞ்சீவ் பட்டை சஸ்பெண்ட் செய்திருந்தது.

கருத்துகள் இல்லை: