சிதம்பரம் சபாநாயகர் தெருவில் ராஜம் என்பவருக்கு சொந்தமான ஓட்டல் ஒன்று உள்ளது. இன்று காலை பழைய கியாஸ் சிலிண்டரை மாற்றிவிட்டு புதிய சிலிண்டரை ஊழியர்கள் பயன்படுத்த முயன்றனர். அப்போது திடீரன்று கியாஸ் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது.
இதையடுத்து கியாஸ் சிலிண்டரும் டமார் என்று வெடித்து சிதறியது. ஓட்டல் ஊழியர்கள் உயிர்தப்பி வெளியே ஓடினார்கள். தீ விபத்தில் ஓட்டலில் இருந்த நாற்காலி, மேஜை மற்றும் பொருட்கள் எரிந்து சாம்பலாகின. ஓட்டலின் சுவரும் சேதம் அடைந்தது. இதை பார்த்ததும் ஓட்டலுக்கு சாப்பிட வந்தவர்களும் பயந்து ஓடினார்கள். இதுகுறித்து சிதம்பரம் தீயணைப்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். தீ விபத்தில் ரூ.1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்ததாக கூறப்படு கிறது. தீ விபத்து பற்றி சிதம்பரம் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தினார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக