செவ்வாய், செப்டம்பர் 06, 2011

கடலூர் அருகே கார் - லாரி மோதல்: தந்தை மகள் சாவு, 3 பேர் காயம்

கடலூர் அருகே ஞாயிற்றுக்கிழமை காரும் டாங்கர் லாரியும் மோதிக்கொண்டதில், தந்தை மகள் இறந்தனர். அவர்களின் உறவினர்கள் 3 பரே பலத்த காயம் அடைந்தனர்.

சிதம்பரம் அருகே வீரசோழகன் கிராமத்தைச் சேர்ந்தவர், விவசாயத் தொழிலாளி செங்குட்டுவன் (45). அவரது மனைவி சாந்தி (35). கடந்த 2 மாதங்களாக சாந்தி நோய்வாய்ப்பட்டு இருந்தார். சிறுநீரகக் கோளாறால் அவர் பாதிக்கப்பட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது.

எனவே சாந்திக்கு புதுவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதற்காக, ஞாயிற்றுக்கிழமை காலை உறவினர்கள் அவரை அழைத்துக் கொண்டு, காரில் புதுவை நோக்கிச் சென்று கொண்டு இருந்தனர்.

காரை சாந்தியின் தம்பி லால்புரம் இளையராஜா (25) ஓட்டினார். காரில் சாந்தியின் தந்தை அரசு பணியில் இருந்து ஓய்வுபெற்ற லால்புரம் அரசன் (61), தாயார் ராசாயி (55), கணவர் செங்குட்டுவன் ஆகியோர் பயணம் செய்தனர்.

கார் கடலூரை அடுத்த பெரியகாட்டுப்பாளையம் அருகே சென்று கொண்டு இருந்தபோது, எதிரில் வந்த டாங்கர் லாரியும் காரும் மோதிக் கொண்டன. இதில் சாந்தி, அவரது தந்தை அரசன் ஆகியோர் அதே இடத்தில் இறந்தனர்.

செங்குட்டுவன், இளையராஜா, ராசாயி ஆகியோர் பலத்தக் காயம் அடைந்தனர். அவர்கள் கடலூர் அரசு மருத்துவ மனையில் சிகிசைக்காகச் சேர்க்கப்பட்டனர். ரெட்டிச்சாவடி போலீஸôர் விசாரணை நடத்தினர்.

கருத்துகள் இல்லை: