சிதம்பரத்தில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு திடீரென ஏற்பட்ட தீவி பத்தில் ஒர்க்ஷாப்பில் இருந்த 8 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து சேதமடைந்தன.
சிதம்பரம் காமாட்சியம்மன்கோயில் தெருவைச் சேர்ந்தவர் மகேஷ். இவர் ஓமகுளம் பகுதியில் மோட்டார் சைக்கிள் பழுதுநீக்கும் கடை வைத்துள்ளார். வெள்ளிக்கிழமை நள்ளிரவு பூட்டியிருந்த கடையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதில் கடையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 8 மோட்டார் சைக்கிள் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தன. மேலும் அங்கிருந்த பொருள்களும் எரிந்து சேதமடைந்தன
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக