இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருத்தீனின் இளைய மகன் அயாஸுத்தீன் இன்று காலை நடந்த சாலை விபத்தில் படுகாயமடைந்து கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடன் சென்ற உறவினர்
மரணம் அடைந்தார்.
மரணம் அடைந்தார்.
அயாஸுத்தீன் தனது உறவினர் ரஹ்மானுடன்(16) ஹைதராபாத் அவுட்டர் ரிங் ரோட்டில் பைக்கில் படுவேகமாக சென்றுள்ளனர்.
ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள புப்புலகுடாவில் அவர்கள் பைக் சறுக்கியதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். உடனே அவர்களை அப்போலோ மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அயாஸுத்தீன் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு வென்டிலேட்டர் மூலம் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். அப்ஸல் சிகிச்சை பலனின்றி பிரதாபமாக உயிர் இழந்தார்.
மகன் விபத்தில் சிக்கிய செய்தி கிடைத்ததும் அசாருத்தீன் லண்டனில் இருந்து ஹைதராபாத் விரைந்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக