மூன்று நாட்கள் தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள நரேந்திர மோடிக்கு அதிமுக சார்பில் நல்லெண்ண அடிப்படையில் ஆதரவ அளிக்கப்பட்டது என ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் அளிக்கும் போது; மத நல்லிணக்கம், அமைதி, ஒற்றுமை ஆகியவற்றை வலியுறுத்தியே உண்ணாவிரதம் இருப்பதாக குஜராத் முதல்வர் மோடி அறிவித்துள்ளார். எதை வலியுறுத்தி அவர் உண்ணாவிரதம் இருக்கிறாரோ அதே கொள்கைகளைத் தான் அதிமுகவும் வலியுறுத்துகிறது.
இந்தச் சூழலில், என்னிடம் தொலைபேசி மூலம் பேசிய நரேந்திர மோடி, தமது உண்ணாவிரதத்துக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொண்டார். அதன் அடிப்படையிலேயே அதிமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர்கள் தம்பிதுரையையும், மைத்ரேயனையும் குஜராத் அனுப்பி வைக்க முடிவு செய்தேன்.
நல்லெண்ண அடிப்படையிலேயே அவர் உண்ணாவிரதம் மேற்கொள்கிறார். அதில் பிழை எதையும் காண இயலாது. மதங்களுக்கு இடையே அமைதியையும், நல்லிணக்கணத்தையும், காப்பதற்காகவே இந்த உண்ணாவிரதம் நடத்தப்படுவதாக மோடி அறிவித்துள்ளார்.” என்றார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக