செவ்வாய், செப்டம்பர் 20, 2011

சிக்கிம் பூகம்பம்: பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு

சிக்கிம்-நேப்பாள எல்லையில் கடந்த தினம் ஏற்பட்ட பலத்த பூகம்பத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 72 ஆனது. அதிகமானோரைக் காணவில்லை. மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து
கொண்டிருக்கின்றன.
ஆனால் கடுமையான மழையும், மண் சரிவும் மீட்பு நடவடிக்கையைப் பெரிதும் பாதித்துள்ளது. துரிதமாக மீட்பு நடவடிக்கையை மேற்கொள்ள முடியவில்லை. மண் சரிவால் முக்கிய சாலைகள் அடைபட்டு போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
சிக்கிமில் 41 பேரும், நேப்பாளிலும், திபெத்திலும் தலா 7 பேரும், பீகாரில் 8 பேரும், வங்காளத்தில் 9 பேரும் மரணமடைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் மன்மோகன் சிங் மரணமடைந்தவர்களுக்கு அவர்களின் குடும்பத்தாரிடம் தலா 2 லட்சம் ரூபாயும், படுகாயமுற்றோருக்கு தலா ஒரு லட்ச ரூபாயும் தரப்படும் என அறிவித்துள்ளார்.
ஞாயிறு மாலை 6 மணியளவில் ரிக்டர் அளவில் 6.8 பதிவான இந்தப் பூகம்பம் வட இந்தியா முழுவதும் உலுக்கியெடுத்தது.

கருத்துகள் இல்லை: