“நான் ஒரு கஷ்மீரீ,நான் இங்கு அரசியல் பேசுவதற்காக வரவில்லை, உங்களின் வலியும்,வேதனையும் என்னுடையது” என்று பல்கலைகழகத்தில் மாணவர்களுக்காக உரையாடிய ராகுல் காந்தி தெரிவித்தார்.
காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் காந்தி இளைஞர்களை தங்கள் கட்சியில் இடம்பெற வைப்பதற்காக ஜம்மு மற்றும் கஷ்மீருக்கு 2 நாள் பயணம் மேற்க்கொண்டுள்ளார். அப்போது பல்கலைகழகம் ஒன்றில் மாணவர்களிடம் பேசிய அவர், “என்னுடைய பாட்டி நான் 14 வயதாக இருக்கும்போதும், என்னுடைய தந்தை நான் 21 வயதாக இருக்கும் போதும் கொல்லப்பட்டனர். என்னாலும் வலியை புரிந்துக் கொள்ள முடியும், நான் இங்கு அரசியல் பேச வரவில்லை, நான் இங்கு வந்திருப்பது என்னால் எந்த அளவுக்கு உங்களுக்கு உதவ முடியும் என்று கற்றுக் கொள்வதற்காக” என்றர்.

ராகுல் காந்தியின் உரையாடலை அமைதியாக கேட்ட மாணவர்களில் ஒருவர், “என்னுடைய தந்தையை நான் ஐந்து வயதாக இருக்கும்போது இழந்தேன், நீங்கள் அப்பொழுது எங்களுக்கு ஏன் உதவவில்லை, நீங்களும் ஒரு கஷ்மீரி என்றால்? இங்கு மாணவர்கள் பல வகையில் துன்புறுத்தப்பட்டு, படிப்பிற்காக நாங்கள் அடுத்த நாட்டை நோக்கி ஓட வேண்டிய நிலையில் உள்ளோம், வேலையற்றவர்களின் எண்ணிக்கையும், படிப்பற்றவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே போகிறது” என்று கேள்வி எழுப்பிய அந்த மாணவனின் கேள்வியை புன்னகையுடன் எதிர் கொண்ட ராகுல் காந்தி, இன்னும் ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்குள் நான் இங்கு தகவல் தொழிநுட்பம் மற்றும் சில பிரிவுகளையும் உண்டாக்கப் போகிறேன், உங்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தருவேன் அதற்க்கு பின் நீங்கள் உண்மையை அறிந்துக் கொள்வீர்கள் என்று பதில் அளித்தார்.
இளைஞன் ஒருவர் இந்தியாவுக்கு தலைவராக இருந்தால் நாளைய இந்தியா சிறப்புடன் இருக்கும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்த அவர், பல்கலைகழகத்தில் தன் உரையை முடித்துவிட்டு முஸ்லிம்களின் புண்ணிய ஸ்தலமான ஹஜ்ரத்பல் என்னும் இடத்தை பார்வையிட்டார்.
இந்த மாணவர்களின் சந்திப்புக்கு முன் அவர் லடாக்கில் உள்ள கார்கில் நகரத்தின் ஒரு பூங்காவில் மிகப் பெரிய கூட்டத்தில் பேசினார். அங்கு அவர் ஜோஜிலா என்னும் பாலைவன வழி தடத்திற்கு சுரங்கம் அமைத்து தருவதாக வாக்குறுதி அளித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக