ரஹீயா காத்துன்,பத்தாம் வகுப்பு படிக்கும் மேற்கு வங்காளத்தை சேர்ந்த மாணவி,தன்னுடைய அறிவியல் கண்டுபிடிப்பிற்காக இந்திய அரசாங்கத்திடம் விருதை பெற்றுள்ளார்.
மேற்கு வங்காளத்தில் இருந்து “National Level Exhibition and Project Competition”–ல் பங்கெடுத்த மாநில சாம்பியனாக இடம் பெற்ற ரஹீயா காத்துன் “INSPIRE Award 2011″-க்கான விருதை பெற்றார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 16-ஆம் தேதி இந்தியாவின் குடியரசுத் தலைவர் பிரதீ௦பா பாட்டிலிடம் இந்த விருதை பெற்ற இவர், விருதுடன் ரூபாய் பத்தாயிரத்தையும், சான்றிதழையும் பெற்றார்.
மேற்கு வங்காளத்தில் உள்ள பிர்பும் என்னும் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் இந்த பெண் பார்வையற்றவர்களுக்காக எடை அளவை (Weighing Machine) கருவியை கண்டுபிடித்துள்ளார்.
மேற்கு வங்காளத்தில் உள்ள பிர்பும் என்னும் மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் இந்த பெண் பார்வையற்றவர்களுக்காக எடை அளவை (Weighing Machine) கருவியை கண்டுபிடித்துள்ளார்.
இந்த எடை அளவையானது, அளக்கும்போது அளவு குறைவாக இருந்தால் ஒரு ஒலியையும், அதிகமாக இருந்தால் மற்றொரு ஒலியையும் மேற்கொள்ளும். இதனால் மளிகைக் கடைகளை, தங்கள் வாழ்வியல் ஆதராமாக கொண்டு வாழும் பார்வையற்றவர்கள் மற்றவர்களிடம் இருந்து ஏமாறுவதை தடுக்கும் அளவிலும், அவர்கள் சரியான எடையை நிறுத்து தர எளிதாகவும் இந்த கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதற்கு வேதியலில் முதுகலை பட்டதாரியான அவரது தலைமை ஆசிரியர் கம்ருத் ஜமான் மற்றும் அவரது பள்ளி ஆசிரியர்களும் உறுதுணையாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். ரஹீயா காத்துன், பிர்பும் மாவட்டத்தில், போல்பூர் காவல்துறையின் கீழ் உள்ள மஹிதாபுரா மிர்ஜபரா என்னும் கிராமத்தில் வசித்து வருகிறார்.
இவரது தந்தை ஷேக் மக்புல் மற்றும் தாய் நபிஷா பிபீ படிப்பறிவற்றவர்களாக இருக்கும் இவர்கள், விவசாய தொழில் செய்து வருகின்றனர். எட்டு பிள்ளைகளை கொண்ட இவர்களுக்கு ரஹீயா காத்துன் மூன்றாவது பெண்ணாவார்.
மண் குடிசையில் வாழும் இவர்களின் வீட்டிற்கு மின் விளக்கு கூட இல்லாத நிலையில் அக்கம் பக்கத்தினர் இவர்களுக்கு மின் இணைப்பு கொடுத்து இவள் படிப்பிற்கு உதவி உள்ளனர்.
ரஹீயாவுக்கு முன் உள்ள இரண்டு சகோதரிகள் தங்களது எட்டாம் வகுப்புடன் பள்ளி படிப்பை நிறுத்திவிட்டு, தனது குடும்ப சூழ்நிலைக்காக வயல் வெளியில் வேலை பார்த்து வருவதாக ரஹீயா தெரிவித்தார்.
அவர்களின் ஒட்டு மொத்த குடும்பமும், ரஹீயாவை உயர் படிப்பிற்கு அனுப்ப வேண்டும் என்ற முடிவுடன் இருக்கின்றனர். அவர்களின் தலைமுறையில் ரஹீயாவே படிப்பறிவு பெற்ற முதல் பெண்மணியும், பத்தாம் வகுப்பு வரை படித்த முதல் பெண்ணுமாவர். இப்பொழுது பதினொன்றாம் வகுப்பை தொடரும் ரஹீயா பத்தாம் வகுப்பில் வாழ்க்கை அறிவியலில் அதிக மதிப்பெண் பெற்ற அவரை, அவரது தலைமை ஆசிரியர் அறிவியல் பாடத்தில் அவரது உயர் படிப்பை தொடங்க வேண்டும் என்று எதிர்பார்த்தார். ஆனால் ரஹீயாவின் குடும்ப வறுமை காரணமாக அவர் ஆர்ட்ஸ் பாடத்தை தொடர்ந்து உள்ளார்.
மேலும் ஊடத்திற்கு பேட்டியளித்த ரஹீயா தெரிவித்தது. “மேற்கு வங்காளத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜி, எப்பொழுதும் பள்ளியின் உயர் மதிப்பெண் பெற்றவர்களுக்கு விருது வழங்கி சிறப்பிப்பார். அதனால் நானும் முதலமைச்சர் எனக்கு தகுந்த விருதை வழங்கி, என்னுடைய உயர் படிப்பிற்கு உதவி தொகை வழங்குவார் என்று நம்புகிறேன். அப்படி என்னை முதலமைச்சர் அழைத்தால் நான் என் குடும்ப நிலையையும், வறுமையிலும் எவ்வாறு படிக்கிறேன் என்ற சூழ்நிலையையும் எடுத்து உரைப்பேன்” என்றும் தெரிவித்துள்ளார்.
ஆனால் மேற்கு வங்காளத்தின் சிறுபான்மையினர் வாரியத்திடம் இருந்து அவருக்கு எவ்வித சலுகைகளும் கிடைப்பதில்லை என்று தெரிவித்து இருந்தார். ரஹீயா மனம் நொந்து கூறிய விஷயம் என்னவென்றால் மேற்கு வங்காளத்தில் முதல் முறையாக அறிவியலில் திறமையை காட்டிய முதல் பெண்மணி, ஆனால் இதுவரை மேற்கு வங்காளத்தின் கல்வி வாரியம் இவருக்கு இது வரை ஒரு பாராட்டோ அல்லது பரிசோ வழங்கவில்லை என்பது தான்.
இந்தியாவின் தலைநகரமான டெல்லியில் இருந்து அழைப்பு வந்த ரஹீயாவுக்கு இதுவரை தனது சொந்த மாநிலத்தில் இருந்து அழைப்பு வராதது மிக்க வேதனை தரக் கூடிய விஷயம் தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக