வியாழன், செப்டம்பர் 08, 2011

லோகயுக்தா:மோடி பிரதமருக்கு எழுதிய கடிதத்தை வெளியிட்டது யார் என குஜராத் நீதிமன்றம் கேள்வி

லோகயுக்தா தொடர்பான வழக்கில் மோடி பிரதமருக்கு எழுதிய கடிதத்தை பத்திரிக்கைக்கு வெளியிட்டது யார் என சார்பதிவாளர் மேலாளர்,தலைமை நீதிபதியின் உதவியாளர் மற்றும் லோகயுக்தாவின் R.A.மேத்தா
ஆகியோரிடம் விளக்கம் கேட்டு குஜராத் உயர்நீதிமன்றம் நோட்டிஸ் அனுப்பியுள்ளது.
முன்னதாக குஜராத் ஆளுநர் மோடியின் ஊழலை விசாரிக்க லோகயுக்தாவிற்கு தலைவராக R.A.மேத்தாவை தேர்வு செய்துள்ளது. இதைத் தொடர்ந்து மோடி R.A.மேத்தாவின் நியமணத்தை திரும்பப் பெறவேண்டும் என்று மோடி பிரதமருக்கு கடிதம் எழுதியிருந்தார்.
கடந்த ஆகஸ்ட் 25-ஆம் தேதி குஜராத் ஆளுநர் கமலா பெனிவல் மாநில அரசை கலந்து கொள்ளாமல் மேதாவை லோகயுக்தாவின் தலைவராக நியமித்தார். மேலும் ஆகஸ்ட் 26  ஆம் தேதி மோடி அரசு லோகயுக்தாவின் நியமனத்திற்கு எதிராக குஜராத் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
லோகயுக்தாவிற்கு எதிரான மோடியின் வழக்கை நீக்கக் கோரி முகுல் சின்ஹா தலைமையில் சமூக சேவை இயக்கமான ஜன் சங்கர்ஷ் மன்ச் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இப்பிரச்சனையில் அரசு முதலில் ஆளுநரை வாதியாக நியமித்தது. பிறகு ஆளுநரின் பெயரை நீக்கி லோகயுக்தாவின் தலைவர் மேத்தாவின் பெயரை வாதியாக சேர்த்துள்ளது.
மேலும் மோடியின் கடிதம் நீதிமன்றத்தை அவமதிப்பதாகும் என இரு மனுக்கள் உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மேலும் லோகயுக்தாவின் தலைவரின் பதவி நீண்ட காலமாக நிரப்படாமல் இருந்தந்தை எதிர்த்து இரு மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன.
பிரதமருக்கு எழுதிய கடிதத்தை சுய நினைவுடன் பத்திரிக்கைக்கு வெளியிட்டதன் மூலம் நர மோடி கிரிமினல் குற்றம் புரிந்துள்ளார் என பிகு ஜெத்வா என்ற சமூக சேவகருக்கு ஆதரவாக வாதிடும் வழக்கறிஞர் யாக்னிக் தெரிவித்துள்ளார். இவ்வழக்கு தொடர்பாக காந்தி சேனா அறக்கட்டளை மற்றும் திராங்கதரா பிரகிருதி மனதால் ஆகியன சார்பில் மேலும் இரு பொதுநல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
கடந்த ஏழு வருடங்களாக லோகயுக்தா குஜராத் மாநிலத்தில் செயல்படாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: