புதன், செப்டம்பர் 14, 2011

ஆஃப்கன்:அமெரிக்க தூதரகம் மற்றும் நேட்டோப்படை தலைமையகத்தின் மீது தலிபான் போராளிகள் தாக்குதல்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நேற்று தலிபான்கள் அமெரிக்கத் தூதரகம், நேட்டோ படையினரின் தலைமையகம் உள்ளிட்ட அதிகபட்ச பாதுகாப்பு கொண்ட கட்டடங்கள் மீது பயங்கர தாக்குதல்களை நடத்தினர்.

அமெரிக்க உளவுப் பிரிவான சிஐஏவின் அலுவலகம், சில ஐரோப்பிய நாடுகளின் தூதரக கட்டடங்கள், ஆப்கானிஸ்தான் ராணுவ தலைமையகம் மீதும் தாக்குதல் நடத்தினர்.
ஏராளமான தலிபான் தற்கொலைப் படையினர் உடலில் வெடிகுண்டுகளுடன் இந்தக் கட்டடங்களில் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதைத் தொடர்ந்து வந்த தலிபான்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியும், வாகனங்களின் வெடிகுண்டுகளை ஏற்றி வந்தும் தாக்குதல் நடத்தினர்.
பகல் 1 மணியளலில் ஆரம்பித்த இந்தத் தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டுள்ளன. பல்வேறு கட்டடங்களின் ஊடுருவியுள்ள தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்திக் கொண்டுள்ளனர்.
இந்தத் தாக்குதலுக்கு பொறுப்பேற்பதாக தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: