நம் அனைவர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக... ஆமீன்.
ஒரு பல்கலைக்கழக விரிவுரையாளர் கூறுகிறார்:

"Well I managed to watch the whole thing right up to the end, when RD himself is accosted outside the hall. I have a different opinion from the commenters so far. I found the Islamic guys to be quite sophisticated in their argumentation techniques and VERY articulate. They were not idiots at all (delusional religious maniacs yes, stupid, no). To tackle them effectively you would have to be quite well educated in a range of areas and as articulate as they are (luckily PZ and the other participants in this farcical video were). I was quite impressed with their efforts relatively speaking - I think they are in a different league from the Muslim people I know, even quite educated ones. - Comment No.10. oOo இந்த வீடியோவைக் கடைசிவரை, அதாவது அரங்கத்திற்கு வெளியே டாகின்ஸ் பேசியது வரை பார்த்தேன். இதுவரை இங்குப் பின்னூட்டமிட்டவர்களின் கருத்துகளில் இருந்து நான் வேறுபடுகின்றேன். தங்களுடைய வாத உத்திகளில் கைதேர்ந்தவர்களாகவும், சொல்ல வேண்டிய கருத்தை மிகத் தெளிவாக எடுத்துரைப்பவர்களாகவும் இருக்கின்றனர் இந்த முஸ்லிம்கள். நிச்சயமாக இவர்கள் மூடர்கள் அல்லர் (மத மயக்கத்தில் இருப்பவர்களா..ஆம், ஆனால் மூடர்கள் கிடையாது). இவர்களைப் போன்றவர்களை வெற்றிகரமாக சமாளிக்க நீங்கள் பல துறைகளில் உங்களை பயிற்றுவித்து கொண்டும், அவர்களைப்போல தெளிவாக கருத்துக்களை வெளிப்படுத்தவும் தெரிந்திருக்க வேண்டும் (அதிர்ஷ்டவசமாக, இந்தப் பொருளற்ற வீடியோவில் வாதித்த மயர்ஸ் மற்றும் ஏனையோர் அப்படி இருந்தனர்). உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், தங்களது முயற்சிகளால், என்னை வெகுவாகக் கவர்ந்து விட்டனர் இந்த முஸ்லிம்கள். நான் அறிந்த, நன்கு படித்த முஸ்லிம்களை விடவும் இவர்கள் வேறுபட்டு நிற்கின்றனர் - (Extract from the original quote of) Comment No. 10" |
இன்றைய நாத்திகர்களின் தலைவர்களில் ஒருவராகக் கருதப்படும் ரிச்சர்ட் டாகின்ஸ் அவர்களது தளத்தில் இந்த விரிவுரையாளர் இட்ட பின்னூட்டத்தைத்தான் நீங்கள் மேலே படித்தீர்கள்.
எதற்காக இப்படிச் சொன்னார்? அவர் குறிப்பிடும் வீடியோ எதைப்பற்றியது? அவர் குறிப்பிடும் அந்த முஸ்லிம்கள் யாவர்?
இந்தக் கேள்விகளுக்கு விடை காண, கடந்த இரண்டாம் தேதி(2.6.2011)க்கு நாம் செல்ல வேண்டும்.
இந்தத் தேதியில், பிரிட்டனின் புகழ் பெற்ற இஸ்லாமிய அமைப்பான "IERA" (Islamic Education and Research Academy, இஸ்லாமியக் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழகம்) ஒரு சுவாரசியமான பத்திரிகை அறிவிப்பை தன்னுடைய தளத்தில் வெளியிட்டிருந்தது. (IERA பற்றிய இத்தளத்தின் பதிவைக் காண இங்கே சுட்டவும்)
அதாவது, 2011 ஜூன் 3 - 5 காலக்கட்டத்தில், அயர்லாந்தின் டப்ளின் (Dublin) நகரில் நடைபெறும் சர்வதேச நாத்திகர் மாநாட்டில் (International Atheist Conference) தாங்கள் கலந்து கொள்ளப் போவதாகவும், அந்த மாநாடு நடைபெறும் அரங்கத்திற்கு வெளியே ஸ்டால் அமைத்து, பிரபல நாத்திகர்களுடன் தாங்கள் நடத்திய விவாத வீடியோக்களை விநியோகம் செய்யப்போவதாகவும் அறிவித்திருந்தது இந்த அமைப்பு.
அதுமட்டுமல்லாமல், தாங்கள் இறைநம்பிக்கை கொள்வதற்கு என்ன காரணங்கள் என்பதை விளக்கும் முகமாக, இந்த மாநாட்டிற்கென பிரத்யோகமாக தயாரிக்கப்பட்ட சிறுநூல்களை (Booklets) விநியோகிக்க போவதாகவும், மேலும், கருத்தரங்கில் கலந்து கொள்ளவரும் டாகின்ஸ், மயர்ஸ் முதலானவர்களுடன் நாத்திகம் குறித்து கலந்துரையாட முயற்சி மேற்கொள்ளப் போவதாகவும் கூறியிருந்தது IERA.
இந்த அறிக்கை, டாகின்ஸ்கின் தளம் தொடங்கி, பல நாத்திகர்களது தளத்தில் சூடான விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்தச் செய்தி உங்களில் சிலருக்கு ஆச்சர்யத்தைக் கொடுத்திருக்கலாம். ஆனால் IERAவை பொருத்தவரை, அவர்களது இம்மாதச் செயல்திட்டத்தில் இது ஒரு பகுதி, அவ்வளவே.
விவாதத்திற்கென தனி பிரிவையே கொண்டுள்ளது இந்த அமைப்பு. சமூகத்தில் நன்கு அடையாளம் காணப்பட்ட நாத்திகர்களுடன் இவர்கள் நடத்திய விவாதங்கள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளன.
குறிப்பாக, சென்ற ஆண்டு, இதே காலகட்டத்தில், அமெரிக்க நாத்திகர்கள் சங்கத்தின் தலைவரான எட் பக்னர் (Dr. Ed Buckner) அவர்களுடன் "இஸ்லாமா? நாத்திகமா?" என்ற தலைப்பில் நடத்திய விவாதம் கவனிக்கத்தக்கது (இந்த விவாதத்தின் சுட்டி கீழே கொடுக்கப்பட்டுள்ளது).
ஆக, நாத்திகர்களுடனான உரையாடல் என்பது இயல்பாகவே இவர்களுக்கு உற்சாகத்தைத் தரக்கூடிய ஒன்று. அந்த உற்சாகம்தான் இந்த மாநாடு குறித்த அறிவிப்பிலும் பிரதிபலித்தது.
மாநாட்டில் கலந்து கொள்வதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஹம்ஸா அண்ட்ரியஸ் ஜார்ஜியஸ் (இவரைப் பற்றிய இத்தளத்தின் கட்டுரையை காண இங்கே சுட்டவும்) மற்றும் அத்னான் ரஷீத் ஆகியோர் ஆவர்.
தெளிவான செயல்திட்டங்களுடன் மாநாட்டிற்குள் நுழைந்தனர்.
தங்களுடைய எண்ணங்களைப் பிரதிபலிக்கும் சிறுநூல்களை, விவாத காணொளிகளை விநியோகித்தனர். மாநாட்டிற்கு வந்தவர்களுடன் நாத்திகம் மற்றும் இஸ்லாம் குறித்து உரையாடினர்.
அவர்கள் எதற்காக அங்குச் சென்றார்களோ அந்த வாய்ப்பை வெகு விரைவிலேயே இறைவன் ஏற்படுத்திக் கொடுத்தான்.
ஆம், நாத்திகர்களால் பெரிதும் மதிக்கப்படும் பரிணாமவியலாளர்களான PZ மயர்ஸ் (PZ Myers) மற்றும் ரிச்சர்ட் டாகின்ஸ் ஆகியோருடன் பேசும் வாய்ப்பு ஏற்பட்டது. இதில் டாக்கின்ஸ்சுடன் சில நிமிடங்களே பேச நேரிட்டாலும், மயர்ஸ்சுடன் சுமார் 25 நிமிடங்கள் கலந்துரையாடக்கூடிய வாய்ப்பைப் பெற்றனர்.
இந்த மினி விவாதத்தைக் கண்ட விரிவுரையாளரின் பின்னூட்டத்தை தான் நீங்கள் மேலே படித்தீர்கள்.
ஆம்...முஸ்லிம்களின் அணுகுமுறை பல நாத்திகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

(இந்த வீடியோவின் முன்பகுதியை நாத்திகர்கள் தங்களது தளத்தில் முதலில் வெளியிடவில்லை. அதனை எடிட் செய்து பாரபட்சமாக நடந்து கொண்டனர் என்ற குற்றச்சாட்டை முஸ்லிம்கள் முன்வைத்திருந்தனர். ஆனால் அந்தக் குற்றச்சாட்டு அறியாமையால் ஏற்பட்ட ஒன்று. காரணம், முஸ்லிம்கள்தான் இந்த விவாதத்தை முதலில் படமெடுக்கத் தொடங்கினர். சிறிது நேரம் சென்ற பிறகுதான் நாத்திகர்கள் கலந்து கொள்ள ஆரம்பித்தனர். ஆகையால், தொடக்கத்தில் சில நிமிடங்களை அவர்கள் தவறவிட்டு விட்டனர். அவர்கள் எவற்றை எடுத்தார்களோ அதனைத் தங்கள் தளங்களில் முதலில் வெளியிட்டு விட்டனர். இதுதான் நடந்தது. ஆகையால், நாத்திகர்கள் எடிட் செய்து விட்டனர் என்ற குற்றச்சாட்டு நிராகரிக்கப்பட வேண்டியது).
சரி, இப்போது அந்த விவாதத்திலிருந்து (மேலோட்டமாக) சில தகவல்கள்...
பொதுவான விசயங்களைப்பற்றி முதலில் கேள்விகளைக் கேட்டு, தம்முடைய விளக்கத்தைக் கொடுத்து, பின்னர் மயர்ஸ்சை குர்ஆனை நோக்கி மிக அழகாகக் கொண்டு வந்தார் ஹம்ஸா. குர்ஆன் கூறக்கூடிய விஷயங்கள் மனிதர்களின் எண்ணங்களுக்கு அப்பாற்பட்டவை என்பதை விளக்கினார்.
ஆனால், மயர்ஸ் இதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
ஹம்ஸா தொடர்ந்தார். குர்ஆன், மலைகளைப் பற்றி கூறும் விஷயங்கள் இன்றைய அறிவியலோடு எப்படி ஒத்துப்போகின்றது என்பதைப் பிரபல விஞ்ஞானிகளின் கூற்றோடு நிரூபிக்க முயன்றார்.
மயர்ஸ் இது பற்றிப் பேசாமல் குர்ஆன் கூறும் சிசு வளரியல் (Embryology) பற்றிப் பேசத் தொடங்கினார் (இந்தத் துறையை சார்ந்தவர் மயர்ஸ்).
இந்த நேரத்தில் அத்னான் ரஷீதும் வாதத்தில் இணைந்து கொண்டார். உலகப் பிரசித்தி பெற்ற சிசு வளரியல் நிபுணரான டாக்டர் கீத்மூர் அவர்கள், குரானின் சிசு வளரியல் குறித்த கருத்துகளை ஆமோதித்திருக்கின்றார் என்ற வாதத்தை முஸ்லிம்கள் முன்வைக்க, அதனை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார் மயர்ஸ். மேலும் கீத்மூர் அவர்களின் கருத்தை ஏதோ ஒரு வார்த்தையில் மயர்ஸ் விமர்சிக்க, அந்த வார்த்தை எடிட் செய்யப்பட்டு பீப் ஒலி கொடுக்கப்பட்டது.
குர்ஆன் கூறும் சிசு வளரியல் குறித்த தகவல்கள் அன்றைய கால மனிதர்களால் யூகிக்கக் கூடிய ஒன்றுதான் என்றும், அரிஸ்டாட்டிலிடமிருந்து முஹம்மது (ஸல்) அவர்கள் இந்த தகவல்களை நகல் எடுத்து விட்டார் என்றும் குற்றம் சாட்டினார் மயர்ஸ்.
அதற்கு ஹம்ஸா கேட்டார் "சிசு வளரியலுக்கு ஒத்துவராத பல விசயங்களை அரிஸ்டாட்டில் சொல்லியிருக்கின்றார். காப்பி அடித்திருந்தால் அனைத்தையும்தானே அடித்திருக்கவேண்டும்? அது எப்படி முஹம்மது (ஸல்) அவர்கள் சரியான ஒன்றை மட்டும் தேர்ந்தெடுத்துவிட்டு, தவறானவற்றை விலக்கியிருக்கின்றார்?'
மயர்ஸ் ஒப்புக்கொள்ளவில்லை. குர்ஆனில் கூறப்பட்டுள்ள சிசு வளரியல் குறித்த கருத்துகள், அன்றைய கால மனிதர்களால் யூகிக்க கூடிய ஒன்றுதான் என்பதில் உறுதியோடு இருந்தார். முஹம்மது (ஸல்) அவர்கள், அன்றைய கால அறிஞர்களுடன் கலந்துரையாடி இந்தத் தகவல்களை பெற்றிருக்கவேண்டும் என்று சொல்ல, அதற்கு ஹம்ஸா "அப்படி இருந்தால் அதற்கு ஆதாரம் காட்ட முடியுமா?" என்று கேட்க, மயர்ஸ் சிறிது நேரம் யோசிக்க ஆரம்பித்தார்.
பின்னர், "இது ஒரு நியாயமான யூகம்" என்று தன்னுடைய கருத்தை மாற்றிக்கொண்டார் மயர்ஸ்.
மற்றொரு சுவாரசிய நிகழ்வும் நடந்தது.
"இதே போன்ற கருத்துகளைத்தான் மத நம்பிக்கையாளர்கள் திரும்ப திரும்பக் கூறிக்கொண்டே இருக்கின்றீர்கள்" என்று மயர்ஸ் கூற, திரும்ப அடித்தார் பாருங்கள் ஹம்ஸா.
"Professor Myers, உங்களுக்கு எப்படியிருக்கும்? நாத்திகர்கள் காலங்காலமாக இதே வாதங்களைதான் வைத்து கொண்டிருக்கின்றார்கள் என்று நான் சொன்னால் நீங்கள் எப்படி உணர்வீர்கள்? இப்படிதான் நாத்திகர்கள் பேசிக்கொண்டிருப்பார்கள் என நானும் சொல்லலாமா?" என்று கேட்க, சற்று யோசனைக்கு பிறகு புன்முறுவலோடு மயர்ஸ் சொன்னார் "Go Ahead".
சிறிது நேரம் சென்று அறோன்ரா (AronRA) என்ற நாத்திகர் மயர்ஸ்சுடன் சேர்ந்து கொண்டார்.
அவர் சொன்னார், "உங்கள் குர்ஆன் பரிணாமத்தை ஏற்றுக்கொள்ளவில்லை"
அதற்கு ரஷீத் சொன்னார், "பரிணாமத்தைப் பற்றி குர்ஆன் பேசவில்லை"
மறுபடியும் அறோன்ரா "உங்கள் குரான் மாபெரும் வெள்ளத்தைப் பற்றி பேசுகின்றது" (கிருத்துவம் சொல்லக்கூடிய நூஹ் (அலை) அவர்களது வரலாறு அப்படியே குர்ஆனில் இருக்கும் என்று நினைத்திருப்பார் போல. குரான் சொல்லக்கூடிய வெள்ளம் கிருத்துவத்தில் உள்ளது போல அல்ல).
அதற்கு ரஷீத், "இதுவும் குர்ஆனில் இல்லை"
மறுபடியும், மலைகளைப் பற்றியும், அதன் செயலாற்றங்கள் குறித்தும் கேள்விகளை எழுப்பினர் முஸ்லிம்கள். எப்படி ஒரு பழங்கால புத்தகம் இவ்வளவு துல்லியமாக இந்த விசயத்தைக் கூறியிருக்க முடியும்? என்று கேள்வி கேட்க, அதற்கு அறோன்ரா "நீங்கள் சொல்வது சிறு பகுதி மட்டுமே. மலைகள் விசயத்தில் இன்னும் பல செய்திகள் உள்ளன" என்று கூறினார். மொத்தத்தில், குரானின் மலைகள் பற்றிய தகவல்களை அவர்கள் மறுக்கவில்லை.
பின்னர் பேசப்பட்டதெல்லாம் நாம் அடிக்கடி கேள்விப்படும் வாதம்தான். அதாவது உணர்வுப்பூர்வமான வாதங்கள்
கடவுளை மறுக்க, இவர்களைப் போன்றவர்கள்கூட, அறிவியல் ஆதாரங்களைக் கொடுக்காமல், உணர்வுப்பூர்வமான வாதங்களைத்தான் வைக்கின்றனர். ம்ம்ம்...
உணர்வுரீதியாக கடவுளை மறுப்பது பற்றிப் பேசும்போது குர்ஆனின் பின்வரும் வசனம் நினைவுக்கு வருகின்றது:
இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி "நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்" என்று கூறியபோது, அவர்கள் "அதில் குழப்பத்தை உண்டாக்கி ரத்தம் சிந்துவோரையா நீ அமைக்கப்போகிறாய்? இன்னும் நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக உன்னைத் துதித்து, உன் பரிசுத்தத்தைப் போற்றியவர்களாக இருக்கின்றோம்" என்று கூறினார்கள்; அ(தற்கு இறை)வன், "நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்" எனக் கூறினான். --- Qur'an 2:30.
கடைசியாக மயர்ஸ்சிடம், "உங்கள் போக்குவரத்துக்கான செலவை நாங்களே ஏற்றுக்கொண்டு, எங்களுடன் ஒரு முழுமையான இதுபோன்ற உரையாடலுக்கு வரச்சொல்லி அழைத்தால் தாங்கள் வருவீர்களா?" என்று ஹம்ஸா கேட்க, அதற்கு "பார்க்கலாம்" என்று கூறினார் மயர்ஸ்.
அதேநேரம், தன்னுடைய நிகழ்ச்சிக்கு (The Magic Sandwich Show) முஸ்லிம்களை அழைப்பதாகக் கூறினார் அறோன்ரா.
"அங்கு எனக்கு sandwich கிடைக்குமா? அது ஹலால் உணவுதானே" என்று ஹம்ஸா கேட்க, அனைவரும் சிரித்துக்கொண்டே விடைபெற்றனர்
பின்னர் டாகின்ஸ்சுடன் சிறிது நேரம் உரையாடினார் ஹம்ஸா. எடுத்த எடுப்பிலேயே டாகின்ஸ் கேட்ட முதல் கேள்வி "நீங்கள் பரிணாமத்தை நம்புகின்றீர்களா?"
அதற்கு ஹம்ஸா சொன்ன பதிலை நான் மிகவும் ரசித்தேன். மிக அழகாகக் கூறினார், "என்னை கேட்கின்றீர்களா? நான் அந்த முடிவை எடுப்பதற்கான போதிய ஆதாரங்கள் இன்னும் இல்லை"

இந்த பதிலைக் கேட்ட டாகின்ஸ், "இது ஒரு அறிவார்ந்த பதில். நான் உங்களுக்கு ஆதாரங்கள் குறித்து விளக்குகின்றேன்" என்று ஆரம்பிக்க, அதற்குமேல் நடந்த டாகின்ஸ்-ஹம்ஸா ஆகியோரது உரையாடலையும், நான் மேலே சொன்ன மயர்ஸ்-அறோன்ரா-ஹம்ஸா-ரஷீத் ஆகியோரது விவாதத்தையும் இந்த வீடியோவில் பாருங்கள்.
இந்த வீடியோ குறித்துப் பதிவெழுதியிருக்கின்றனர் டாகின்ஸ்சும் மயர்சும். அதில் இஸ்லாம் குறித்த அவர்களது அறியாமை தெள்ளத்தெளிவாக பளிச்சிடுகின்றது.
இவர்களது அறியாமையை உலகறியச்செய்யும் விதமாக அதிரடியான ஒரு வீடியோவை மூன்று நாட்களுக்கு முன்பு வெளியிட்டிருக்கின்றது IERA. அந்த வீடியோவைக் கீழே பார்க்கலாம்.

சுப்ஹானல்லாஹ்...எவ்வளவு பொறுமையாக, தெளிவாக விளக்குகின்றார் அத்னான் ரஷீத்.
இந்த மாநாட்டின்போது பல்வேறு சங்கடங்களைச் சந்தித்தபோதும் (கண்ணியமற்ற வார்த்தையை ஹம்ஸாவை நோக்கிப் பயன்படுத்தித் தன்னை யாரென்று காட்டிக்கொடுத்திருக்கின்றார் டாகின்ஸ்), அவற்றையெல்லாம் இறைவனுக்காகப் பொறுத்து கொண்டு, இஸ்லாமைக் கொண்டு செல்வதில் மட்டுமே தங்களின் கவனத்தை செலுத்திய இந்த அற்புத உள்ளங்களுக்கு, இவ்வுலகிலும் மறுமையிலும் மிகச்சிறந்த கூலியை இறைவன் வழங்குவானாக... ஆமீன்.
இறுதியாக:
இந்த மாநாடு குறித்து மிக அருமையாக பின்வருவதை கூறினார் ரஷீத்,
"இந்த மாநாட்டிலிருந்து வெளியே வந்த போது என்னுடைய இறைநம்பிக்கை மேலும் வலுவாகியிருப்பதை உணர்ந்தேன்".

இறைவா, எங்களை என்றென்றும் நேர்வழியில் செலுத்துவாயாக... ஆமீன்.
Please Note:
கடந்த காலங்களிலும் சரி, தற்போதும் சரி, விவாதத்திற்கு வருமாறு டாகின்ஸ்சை அழைத்தாகிவிட்டது.
எனக்குப் புரியாத விஷயம் இதுதான்: நாத்திகத்தை மேலும் கொண்டு செல்ல வேண்டுமென்றுதானே மாநாடு நடத்தினார்கள்? அவர்கள் எதனை ஆணித்தரமாக நம்புகின்றார்களோ அதனைப்பற்றி விவாதிக்கதானே அழைக்கின்றோம்? கலந்து கொள்வதில் என்ன தயக்கம்? சமூகத்தில் நன்கு அறியப்பட்ட மற்ற சில நாத்திகர்கள் கலந்து கொள்ளும்போது டாகின்ஸ்சுக்கு மட்டும் என்ன பிரச்சனை?
அவருக்கே வெளிச்சம்.
இறைவா, நீ நாடுவோரில் டாகின்ஸ்சையும் சேர்த்துக் கொள்வாயாக... ஆமீன்.
அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்.

oOo
நன்றி : சகோ. ஆஷிக் அஹ்மது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக