விருத்தாசலம் அருகே, தலை துண்டிக்கப்பட்டு, நிர்வாணமாக கிடந்த ஆணின் உடலை, போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம், விருத்தாசலம்-சேலம் சாலையில், அடரி அடுத்து, கச்சிமைலூர் கிராமம் உள்ளது. இக்கிராமத்திற்கு செல்லும் மண் பாதையின்
பக்கத்திலுள்ள விவசாய நிலத்தில், நேற்று காலை, 45 வயது மதிக்கத்தக்க ஆண் பிணம், நிர்வாண நிலையில், தலை துண்டிக்கப்பட்டு கிடந்தது. பிணத்தின் அருகில், கத்தி மற்றும் செருப்பு கிடந்தது. பிணத்தின் கை விரல்களில் மோதிரம் அணிந்ததற்கான அடையாளம் இருந்தது. திட்டக்குடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கொலையாளிகளை கண்டறிய, மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. இறந்தவரின் தலையை அருகிலுள்ள காடுகளிலும், சவுக்கு தோப்புகளிலும் போலீசார் தேடி வருகின்றனர். இறந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர், கொலைக்கான காரணம், கொலையாளிகள் யார் என்பது குறித்து, போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
சிறுபாக்கம் பகுதியில், கடந்தாண்டு நடந்த இரு கொலை சம்பவங்களில் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
Source: Dinamalar

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக