சனி, செப்டம்பர் 17, 2011

திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் எம்.பரஞ்சோதி

திருச்சி மேற்கு தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் எம்.பரஞ்சோதி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொகுதியில் போட்டியிட்டு
வென்று அமைச்சரான மரியம் பிச்சை விபத்தில் பலியானதையடுத்து இந்த இடைத் தேர்தல் நடக்கிறது.
2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை ஸ்ரீரங்கம் தொகுதி எம்.எல்.ஏவாக இருந்தவர் பரஞ்சோதி. 2011ல் சட்டமன்ற தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் ஜெயலலிதா போட்டியிட்டபோது பரஞ்சோதி, தேர்தல் பொறுப்பாளராகப் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இத்தொகுதியில் மீண்டும் ஒரு இஸ்லாமியருக்கு இடங்கொடுப்பார் என்று எதிர்ப்பார்த்த நிலையில் ஜெயலலிதாவின் இம்முடிவு இஸ்லாமியர்கள் மத்தியில் கடும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

கருத்துகள் இல்லை: