பாருளுமன்ற தாக்குதல் வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கபட்ட அப்சல் குருவிற்கு மன்னிப்பு அளிக்க வேண்டும் என்று கோரும் கஷ்மீர் மாநில சட்டசபை
தீர்மானத்திற்கு பி.டி.பி ஆதரவு அளிக்குமென்று அதன் தலைவர் மெஹ்பூபா முப்தி அறிவித்துள்ளார்.
தீர்மானத்திற்கு பி.டி.பி ஆதரவு அளிக்குமென்று அதன் தலைவர் மெஹ்பூபா முப்தி அறிவித்துள்ளார்.
அக்கட்சியின் சட்டசபை கட்சி கூட்டத்திற்கு பின்பு இதை அவர் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.
அப்சல் குருவிற்கு மன்னிப்பு அளிக்க வேண்டும் என்று குடியரசு தலைவரிடம் கோரும் தீர்மானத்தால் வானம் ஒன்றும் இடிந்து விழாது என்றும் அவர் கூறினார்.
முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ்காந்தி கொல்லப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நளினிக்கு பின்பு அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதே வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கபட்ட மூன்று குற்றவாளிகளின் தண்டனையையும் ரத்து செய்ய தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருப்பதையும் அவர் சுட்டி காட்டினார்.
இந்த மாதம் செப்டம்பர் 28-ல் கஷ்மீர் சட்டசபையில் இத்தீர்மானம் விவாதத்திற்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக