ஈராக்கின் அரசியல் தலைவர்கள் அனைவரும் அமெரிக்கப் படை ஈராக்கை விட்டு இந்த ஆண்டு இறுதியில் வெளியேற வேண்டும் என்று ஒருமனதாக தீர்மானம் மேற்கொண்டுள்ளனர் என்று தற்போதைய ஈராக்கின் தலைவர் ஜலால் அல் தலபானி தெரிவித்துள்ளார்.
ஈராக்கின் பிரதமர் நூறு-அல் மாலிகி மற்றும் ஈராக்கின் உயர் அதிகாரிகளை சந்தித்த பிறகு அமெரிக்க படைகள் வெளியேற வேண்டும் என்று அனைத்து அரசியல் தலைவர்களும் கோருவதாக கடந்த ஞாயிறு அன்று பக்தாத்தில் பத்திரிக்கைக்கு தெரிவித்தார்.
தற்போது ஈராக்கில் 47,000 அமெரிக்க துருப்புகள் நிலை கொண்டுள்ளன. 2008 ஆம் ஆண்டு மேற்கொண்ட படைகளின் நிகழ்நிலை உடன்படிக்கையின் படி இந்த ஆண்டு இறுதியில் அனைத்து அமெரிக்கப் படைகளும் ஈராக்கை விட்டு வெளியேற வேண்டும். ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்க பாதுகாப்பு செயலாளராக இருந்த ராபர்ட் கேட்ஸ் அமெரிக்க படைகள் ஈராக்கில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
மேலும் அமெரிக்க பணியாளர் துணைத் தலைவர் மைக் முல்லன் சில அமெரிக்க படைகளை பாக்தாத்தில் தொடர்ந்து நிலைபெற செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.
இது பற்றி ஈராக்கின் தற்போதைய தலைவர் தலபானி கூறியதாவது; அடுத்த வாரம் நடக்க இருக்கும் கூட்டத்தில் ஈராக்கின் ராணுவ வீரர்களுக்கு பயிற்சி கொடுப்பதற்காக அமெரிக்க வீரர்களில் சிலரை ஈராக்கில் நிலைபெற செய்வதற்கு அனைத்து தலைவர்களும் உடன்படுவார்கள் என்றும் தாம் ஆனால் தான் எதிர்க்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த 2003 ஆம் ஆண்டு அமெரிக்கா ஈராக்கை பேரழிவு ஆயுதம் வைத்திருப்பதாக கூறி ஆக்கிரமிப்பு செய்தது. ஆனால் ஈராக்கிடம் அப்படி எந்த பேரழிவு ஆயுதமும் இருக்கவில்லை என்று அமெரிக்காவும் பிரிட்டிஷ் அரசும் அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் அமெரிக்காவின் இந்த ஆக்கிரமிப்பினால் ஒரு மில்லியன் மக்களுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர் என்று கலிபோர்னியாவில் உள்ள புலானாய்வு அமைப்பு ஒன்று கணக்கெடுப்பு நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக