புதன், அக்டோபர் 26, 2011

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் அசாம் மாணவர் கொலை

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பயிலும் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் திங்கள்கிழமை இரவு கொலை
செய்யப்பட்டார். ÷இது தொடர்பாக பல்கலைக்கழகத்தில் பயிலும் பிகார் மாநிலத்தைச் சேர்ந்த இரு மாணவர்களை அண்ணாமலை நகர் போலீஸôர் கைது செய்தனர்.


அசாம் மாநிலத்தைச் சேர்ந்த திருபா ஜோதி தத்தா (19). இவர் சிதம்பரம் முத்தையா நகரில் வீடு எடுத்து பொறியியல் இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார்.


இவர் திங்கள்கிழமை இரவு வீட்டில் இருந்த போது முன்விரோதம் காரணமாக, உடன் பயிலும், அதே பகுதியில் வசிக்கும் பீகாரைச் சேர்ந்த மாணவர்கள் ராகேஷ்ரோஷன் (19), அங்கிட்குமார் (19) ஆகிய இருவரும் தத்தாவின் வீட்டு கதவை தட்டியுள்ளனர்.


அப்போது கதவை திறந்து போது, அவரை மேற்கண்ட இருவரும் ரீப்பர் கட்டையால் தலையில் கடுமையாக தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த திருபா ஜோதிதத்தா மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லும் வழியில் இறந்தார். தகவல் அறிந்த சிதம்பரம் ஏ.எஸ்.பி. எம்.துரை, அண்ணாமலைநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆரோக்கியராஜ் மற்றும் போலீஸôர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு கொலை சம்பவத்தில் ஈடுபட்ட ராகேஷ்ரோஷன், அங்கிட்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.


மாணவர் திருபாஜோதிதத்தாவின் உடல் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: