சனி, அக்டோபர் 15, 2011

பரங்கிப்பேட்டையில் வெற்றி யாருக்கு?

பரங்கிப்பேட்டை  பேரூராட்சித் தலைவர் பதவியை பிடிக்க திமுக, அதிமுக, சுயேச்சை வேட்பாளர்களிடையே மும்முனை போட்டி நிலவுகிறது.


பரங்கிப்பேட்டை பேரூராட்சித் தலைவர் பதவிக்கு திமுக வேட்பாளராக ஏற்கனவே தலைவராக இருந்த முகமது யூனூஸ், அதிமுக வேட்பாளர் மாரிமுத்து, தேமுதிக வேட்பாளராக ஷேக் முஜிபுர் ரஹ்மான் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் ஜெகந்நதான், ஜெய்சங்கர், முகமது சபியுல்லா ஆகிய 6 பேர் போட்டியிடுகின்றனர்.
 
திமுக வேட்பாளர் முகமதுயூனூஸ் பெரும்பான்மையாக உள்ள முஸ்லிம் வாக்குகளை நம்பியும், திமுக ஆட்சியில் தான் செய்த சாதனைகளையும் சொல்லி மீண்டும் தலைவர் பதவியை தக்க வைத்துக் கொள்ள தீவிரமாக வாக்குச் சேகரித்து வருகிறார்.
 
அதிமுக வேட்பாளர் மாரிமுத்துவை ஆதரித்து அமைச்சர் செல்வி ராமஜெயம் பரங்கிப்பேட்டையில் வீடு. வீடாக சென்று வாக்குச்  சேகரித்து வருகிறார்.
 
அவருடன் மாவட்டச் செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான அருண்மொழிதேவனும் வாக்குச் சேகரித்து வருகிறார். ÷சுயேச்சை வேட்பாளர் ஜெகந்நாதன் பரங்கிப்பேட்டையில் தனது சொந்த செல்வாக்கு உள்ளதால், அதை பயன்படுத்தி வெற்றி பெற தீவிர வாக்குச் சேகரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்.
 
அதேபோல் தேமுதிக வேட்பாளர் ஷேக்முஜிபுர் ரஹ்மான், ஜெயசங்கர், முகமது சபியுல்லா ஆகியோர் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 
பரங்கிப்பேட்டை, சமூக நலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயத்தின் சொந்த ஊராகும். தனது சொந்த ஊரில் பேருராட்சித்  தலைவராக அதிமுக வேட்பாளரை வெற்றி பெறச்செய்ய வேண்டும் என முழுவீச்சில் தேர்தல் பணியாற்றி வருகிறார்.

கருத்துகள் இல்லை: