அல்கொய்தாவின் முக்கியத் தலைவர் அன்வர் அல் அவ்லாகி ஏமனில் நடந்த ஆளில்லா விமானத் தாக்குதலில் பலியானதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அரபு தீபகற்பத்தில் செயல்படும் அல்கொய்தாவின் முக்கியத் தலைவர் அன்வர் அல் அவ்லாகி. இவரை அமெரிக்கா பயங்கரவாதி என பிரகடனப்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இவரை சுட்டுக் கொல்லும்படி தனிப்பட்ட முறையில் உத்தரவிட்டுள்ளார்.
அரபு தீபகற்பத்தில் செயல்படும் அல்கொய்தாவின் மைய இடமாக செயல்படும் ஏமனின் கிழக்குப் பகுதியில் அவ்லாகி வசிப்பதாக செய்திகள் அவ்வப்போது வெளிவரும்.
ஆனால் 2007 முதல் இவரை அமெரிக்கா தேடி வருகிறது. இந்நிலையில் ஏமனின் கிழக்குப் பகுதியில் உள்ள மரிப் மாகாணத்தில் அமெரிக்காவின் ஆளில்லா விமானங்கள் நடத்திய தாக்குதலில் அவ்லாகி கொல்லப்பட்டார் என்று கூறப்படுகிறது. இத்தகவலை அமெரிக்க அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். இதை ஏமன் அரசும் உறுதிப்படுத்தியுள்ளது எனத் தகவல்கள் தெரிவித்துள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக