திங்கள், அக்டோபர் 10, 2011

ஜனாதிபதி பதவிக்கு பிஜேபி-யின் சார்பாக ஹசாரே போட்டியிடுவார் – திக்விஜய் சிங்


பி.ஜே.பி-க்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லையென்று அன்னா ஹசாரே கூறிவந்த நிலையில் தற்போது 2012  ஆம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தலில்
 அன்னா ஹசாரே பிஜேபி யின் சார்பாக போட்டியிடுவார் என்று திக்விஜய் சிங் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார்.

ஜன லோக்பால் மசோதாவை காங்கிரஸ் அரசு நிறைவேற்றவில்லை என்று உத்திர பிரதேச ஹிசார் தொகுதியில் நடக்க இருக்கும் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் வரலாறு காணாத தோல்வியை காங்கிரசுக்கு தரவேண்டும் என்று அன்னாவின் அணி மக்களை கேட்டுக்கொண்டுள்ளது. இதற்கு பதில் அளித்துள்ள திக்விஜய் சிங் பேசியதாவது;

 வருகின்ற 2012-ஆம் ஆண்டு நடக்க இருக்கும் ஜனாதிபதி தேர்தலில் அன்னா ஹசாரே அனைத்து கட்சியின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று பிஜேபி அறிவித்துள்ளது என்றும் ஹசாரே தான் அரசியலை விரும்பாதவர் என்று கூறி வருவதால் அவர்தான் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் கூறினார்.

அன்னா அணியின் உண்மை முகத்தை தோலுரித்து காட்டிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் திக்விஜய் சிங் “அன்னா ஹசாரே அரசியல் செய்ய வேண்டும் என்றால் அவர் தனக்கென ஒரு கட்சியை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

 முன்னதாக ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் ஹசாரேவுக்கு தொடர்பு இருப்பதாக திக்விஜய் சிங் கூறியபோது ஹசாரே அவரை மனநோய் காப்பகத்திற்கு அனுப்ப வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுருந்தார். அதற்கு தற்போது பதிலளித்துள்ள சிங் இப்போது ஆர்.எஸ்.எஸ். அமைப்பே தனக்கும் ஹசாரேவிற்கும் தொடர்பு இருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது ஹசாரேவும் தன்னுடன் மனநோய் காப்பகத்திற்கு வரவேண்டும் என்றும் தனக்கும் ஹசாரேவிற்கும் சேர்த்தே அங்கு சோதனைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் சிங் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: