வியாழன், அக்டோபர் 13, 2011

வேட்பாளருக்கு சூனியம் வைத்ததாக பரபரப்பு



 ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடும் பெண் வேட்பாளர் ரேவதி வீட்டின் முன், மாவு பொம்மை செய்து பூசணிக்காய் வெட்டி, படையல்
 போட்டப்பட்டிருந்ததால் யாரோ பில்லி சூனியம் வைத்துள்ளதாக பரபரப்பு ஏற்பட்டது.


பண்ருட்டி வட்டம் எலந்தம்பட்டு ஊராட்சித் தலைவர் பதவிக்கு அதே பகுதியைச் சேர்ந்த ரேவதி போட்டியிடுகிறார்.


இவரது வீட்டு வாசல் முன் திங்கள்கிழமை இரவு, மர்ம நபர்கள் சிலர், இரண்டு மாவு பொம்மைகளை வைத்து, பூசணிக்காய் வெட்டி படையல் போட்டு சென்றுள்ளனர்.செவ்வாய்க்கிழமை காலை எழுந்த பார்த்த ரேவதி வீட்டு வாசலில் இருந்த படையலைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.


உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் ரேவதி, வெற்றி பெறக்கூடாது என்பதற்காக பில்லி சூனியம் வைத்துள்ளதாக அப்பகுதி முழுவதும் தகவல் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

கருத்துகள் இல்லை: