சிதம்பரத்தில் பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் உள்ளே புகுந்து 10 பவுன் நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்கத்தை
கொள்ளையடித்துச் சென்றனர்.
சிதம்பரம் எம்.கே.தோட்டம் பகுதியில் வசிப்பவர் லோகாம்பாள் (70). இவரது கணவர் ஓய்வுபெற்ற ஆசிரியரான வெங்கடாசலம் இறந்துவிட்டார். இந்நிலையில் லோகாம்பாள் தனது மகன் கண்ணனுடன் வசித்து வந்தார். நெய்வேலியில் தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்க்கும் கண்ணன் வெள்ளிக் கிழமை இரவு நெய்வேலிக்கு சென்றுள்ளார். இதனால் லோகாம்பாள் வீட்டை பூட்டிக் கொண்டு அருகே சிவசக்தி நகரில் உள்ள மகள் சித்ராதேவி வீட்டில் சென்று தூங்கியுள்ளார்.
சனிக்கிழமை காலை வீடு திரும்பியபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவிலிருந்து 10 பவுன் நகைகள் மற்றும் ரொக்கம் ரூ.10 ஆயிரம் திருடு போனது தெரியவந்தது.
இது குறித்து புகாரின் பேரில் நகர போலீஸôர் வழக்குப் பதிந்து
விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நன்றி: தினமணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக