செவ்வாய், நவம்பர் 01, 2011

வெற்றிவாகை சூடி இருக்கும் இப்பாயின் என்கிற இப்ராஹிம் அவர்களுக்கு ஜமால் சில கோரிக்கை



நமது வார்டில் வெற்றிவாகை சூடி இருக்கும் இப்பாயின் என்கிற இப்ராஹிம் அவர்களுக்கு ராயல் தெரு சார்பாக வாழ்த்துக்கள், மட்டுமல்லாமல் சில கோரிக்கைகளை முன்வைக்கிறேன்.
 
சில பல ஆண்டுகாலம் ராயல் தெருவுக்கு பெருமை சேர்த்துவரும் நமது சபைக்கு உள்ள தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டி ........,    9: 10   மணியிலிருந்து 11:30 மணிவரை இரவு தூக்கத்தை துளைத்துவிட்டு தெருவின் பாதுகாப்பு கருதி சபை உறுப்பினர்களாகிய நாங்கள்  சரியான மின்விளக்கு இல்லாத காரணத்தால் சிரமப்படுகிறோம்,

அதை நிவர்த்தி செய்யவும்.Ø  மிகமுக்கியமான , வாதத்திறமை நிறைந்த பேச்சுல்கள் பேசப்படுவதால் நாற்காலிகள் இல்லாமல் தொய்வு அடைகிறோம். எனவே அதற்கு ஏற்பாடு செய்யவும்.Ø  சில நேரங்களில் மணிக்கணக்கில் பேச்சுக்கள் நீண்டு விடுகிறது. சலிப்பு தட்டாமல் இருக்க ராயல் தெரு, பெரிய ஆசுரகானா தெரு, வல்லத்தம்ம்பி மரைக்கார் தெரு முஹல்லா வாசிகள், தேநீர் , சேமியான் கஞ்சி , பச்சைபயர் கஞ்சி போன்றதை அவப்போது கொடுத்து சஹோதரர்களை உற்சாகப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். 

 வெறும் சுலைமானி டீ , கிழங்கு பஜ்ஜி மட்டும் தான் இப்போதைய இடைவெளி உணவாக உள்ளது என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கின்றேன்.   நாற்காலி வாங்கிகொடுக்க முடியவில்லை என்றால் காட்டுத்தனமான கொள்ளிடம் பாய் சிலவற்றை வாங்கித்தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.  சபையில் உறுப்பினர்கள் காலப்போக்கில் அதிகமாகும் என்பதால் (ID CARD) கார்ட் சிஸ்டம் கொண்டுவருமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

சில நேரங்களில் மின்விளக்கு முற்றிலும் துண்டித்துவிடுகிறது. ஆகையால் ராட்ஷஸ ப்ரைட் லைட் (BRITE LIGHT) வாங்கித்தருமாறு கேட்டுக்கொள்கிறேன்.
ராயல் மேட்ரிக்ஸ் சபை சார்பாக !!!!

!துபையிலிருந்து -
 ஜமால்

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

Boss ungak alichatiyathukku oru alavu illama poiettu erukku...

Abbas

பெயரில்லா சொன்னது…

nee ga vate poda light vanuma