வியாழன், நவம்பர் 10, 2011

புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளார்: எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின்



பங்களாதேசை பிறப்பிடமாக கொண்ட எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரின் சர்ச்சைக்காக பிறந்தவர் போலும். இப்பொழுது மீண்டும் ஒரு புதிய சர்ச்சையை கிளப்பி உள்ளார்.


அனைத்து முஸ்லிம்களும் தங்கள் ஈகை திருநாளாம் “ஈத்” தினத்தை உற்சாகத்துடன் கொண்டாடும் வேளையில், ஏற்க்கனவே இவரது அவசியமற்ற வேலைகளுக்காக கொலை மிரட்டல் கிடைக்கப்பெற்ற இந்த சர்ச்சைக்குரிய எழுத்தாளர் மீண்டும் ஒரு புதிய சர்ச்சையை எழுப்பியுள்ளார்.

தற்பொழுது இவரது விமர்சனம் மிருகங்களின் தியாகம் பற்றியும், ஏக இறைவன் அல்லாஹ்வை பற்றியுமாகும். அப்பாவி விலங்குகளின் இரத்தில் சாந்தத்தை காணும் இறைவன் எப்படி சிறந்தவராக இருக்க முடியும் என்றும், உணவுக்காக விலங்குகளை கொலை செய்பவர்கள் இறைவன் சிறந்தவன் என்று எப்படி சொல்ல இயலும் என்று கடும் சொற்களை தன்னுடைய ட்வீட்டரில் வெளியிட்டுள்ளார்.

இதே போல் கடந்த 1994-ஆம் ஆண்டு முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பங்களாதேசில் வெளியான நாவல் லஜ்ஜாவில், முஸ்லிம்கள் சிறுபான்மை ஹிந்துக்களுக்கு எதிராக வன்முறையை செய்வது போல் சித்தரித்த இவரது நாவலால் இவர் சொந்த நாடான பங்களாதேசை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மிருகத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக செய்த செயல் அனைத்து இஸ்லாமிய மனிதர்களின் மனதை புண்படுத்தியுள்ளது என்பதை தஸ்லிமா நஸ்ரின் நினைவில் கொள்ள மறந்து விட்டார்

கருத்துகள் இல்லை: