கோவை ப்ரஸ் க்ளப்பிற்கு அருகில் வெடிப்பொருட்கள் கைப்பற்றப்பட்ட சம்பவம் தொடர்பாக கைதுச் செய்யப்பட்ட கேரள மாநில பி.டி.பி கட்சியின் தலைவர் அப்துல் நாஸர் மஃதனியை கோவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசாரால் இயலவில்லை.
தற்பொழுது பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கில் அநியாயமாக கைதுச் செய்யப்பட்டு கர்நாடகா மாநிலம் பரப்பனா அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மஃதனியின் உடல்நிலை திருப்திகரமானது என மருத்துவர்கள் சான்றிதழ் வழங்காதததால் அவரை ஆஜர்படுத்த இயலவில்லை.
கடுமையான நோய்களால் அவதியுறும் அப்துல் நாஸர் மஃதனிக்கு இவ்வளவு தூரம் பயணம் செல்வதற்கு உடல்நிலை ஒத்துவராது என டாக்டர்கள் சான்றிதழ் வழங்கியுள்ளனர். ஆனால், நேற்று வழக்கை விசாரித்த கோவை எட்டாவது ஜூடிஸியல் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றம் அப்துல் நாஸர் மஃதனியை டிசம்பர் 10-ஆம் தேதி நேரடியாக ஆஜர்படுத்த உத்தரவிட்டது.
பல்வேறு நோய்களால் அவதியுறும் மஃதனியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாக ஆஜர்படுத்த அனுமதிக்க வேண்டுமென கோரி அவருடைய வழக்கறிஞர் சமர்ப்பித்த மனுவை பரிசீலித்த நீதிமன்றம், வழக்கு தொடர்பான முதல் விசாரணைக்கு அப்துல் நாஸர் மஃதனி ஆஜராகவேண்டும் எனவும், அதனை தொடர்ந்து வரும் விசாரணைகளுக்கு வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாக ஆஜராகலாம் எனவும் உத்தரவிட்டது.
கடந்த மாதம் 3-ஆம் தேதி அப்துல் நாஸர் மஃதனியை ஆஜர்படுத்த உத்தரவிட்டபோதும் நோயாளியான அவரை கோவைக்கு கொண்டு செல்வதற்கான எவ்வித ஏற்பாடுகளையும் கோவை போலீஸ் செய்யவில்லை. இதனைத் தொடர்ந்து அவரை கோவைக்கு கொண்டு செல்வதற்கு பெங்களூர் சிறை அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக