நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் நியமன குழுவிற்கான தேர்தல் இன்று நடக்கிறது. உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த மாதம் நடந்தது. அதில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகளையும்,
16 பேரூராட்சிகளில் 14 அ.தி.மு.க., கைப்பற்றியது. அதனைத் தொடர்ந்து நடந்த துணைத் தலைவர் பதவிக்கான தேர்தலிலும் பெரும்பான்மையான பதவிகளை அ.தி.மு.க.,வே கைப்பற்றியது. இந்நிலையில் நகராட்சிகளில் நியமனக்குழு மற்றும் ஒப்பந்த குழுவிற்கு தலா ஒருவரும்,
வரி மேல் முறையீட்டுக் குழுவிற்கு 8 பேரும், பேரூராட்சிகளில் நியமன குழுவிற்கு தலா ஒருவரும், வரி மேல் முறையீட்டுக் குழுவிற்கு தலா மூவரும் தேர்வு செய்யப்பட வேண்டும். இதற்கான தேர்தல் இன்று அந்தந்த நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் நடக்கிறது.
இந்த பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் காலை 9.30 மணிக்கு அந்தந்த நகராட்சி கமிஷனர் மற்றும் பேரூராட்சிகளில் செயல் அலுவலரிடம் மனு தாக்கல் செய்ய வேண்டும். போட்டியிருப்பின் ஓட்டெடுப்பு நடத்தப்படும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக