ஞாயிறு, டிசம்பர் 04, 2011

பரங்கிப்பேட்டை மக்தும்அலி கைது -

பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6-ந்தேதி அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தமிழ்நாடு முழுவதும் போலீசார் கடந்த 3
நாட்களாக தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள்.   சென்னையிலும் இந்த சோதனை தீவிரமாக நடந்து வருகிறது.
 
ரெயில் நிலையம், விமான நிலையம், பஸ்நிலையங்களில் இரவு- பகலாக சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதுதவிர ஓட்டல்கள், லாட்ஜ்கள் மற்றும் வணிக வளாகங்களிலும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.  
 
திருவல்லிக்கேணி டாக்டர் பெசன்ட் ரோட்டில் உள்ள தர்பார் லாட்ஜிலும் இதேபோல் நேற்றிரவு போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது சந்தேகப்படும்படியாக 2 பேர் தங்கி இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.  
 
போலீசாரை கண்டதும் அவர்கள் தப்பி ஓட முயன்றனர். ஆனால் போலீசார் அவர்களை துப்பாக்கி முனையில் மடக்கி கைது செய்தனர். பிடிபட்டவர்கள் பெயர் வருமாறு:-
 
1. சாதிக்பாட்ஷா என்ற துராப் (வயது 28). மயிலாடுதுறை அருகே உள்ள நீடூர் கிராமத்தை சேர்ந்தவர்.
 
2. மக்தும்அலி (வயது 25) கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையை சேர்ந்தவர்.   இவர்களிடம் இருந்து கத்தி மற்றும் அரிவாள்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அதில் வெளிநாட்டு பட்டன் கத்தியும் இருந்தது. பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி (டிசம்பர் 6) சென்னையில் பயங்கரவாத சதி செயல்களில் ஈடுபட இவர்கள் பதுங்கி இருந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
 
கடந்த 6 மாதமாக ஐஸ்அவுஸ் பகுதியில் தங்கி இருந்து பல பேருக்கு இவர்கள் பல்வேறு பயிற்சி கொடுத்து வந்ததும் விசாரணையில் தெரிய வந்தது.   கைதான 2 பேரையும் போலீசார் எழும்பூர் கோர்ட்டில் இன்று மதியம் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
 
நன்றி: மாலை மலர்  
 
ஊர் ஜாமாஅத் இந்த போலியான கைதுக்கு எதிராக களம் காணுமா????

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

இந்த விசயத்தில் ஊர் ஜமாஅத் தலை இட்டு இந்த அப்பாவி நபரை காப்பாற்ற வேண்டும்.
அஹ்மத் - சிங்கை

பெயரில்லா சொன்னது…

இந்த விஷயத்தை மற்ற பரங்கிபேட்டை இனைய தளங்கள் வெளிஈட வேண்டும்.

முஹம்மது ஆலம் - uae