வியாழன், டிசம்பர் 08, 2011

முஸ்லிம் உரிமை பாதுகாப்புக்கழக செயற்குழுக் கூட்டம்

கடலூர் மாவட்ட முஸ்லிம் உரிமை பாதுகாப்புக் கழக செயற்குழுக் கூட்டம் நெல்லிக்குப்பத்தில் நடந்தது.
சிறுபான்மை பிரிவு தலைவர் அம்சா பாஸ்கரன் தலைமை தாங்கினார். நகர செயலர் முகமது அய்யூப் வரவேற்றார்.

மாநில பொதுச் செயலர் இடிமுரசு இஸ்மாயில் சிறப்புரையாற்றினார். பக்ருதீன், ஹாஜா மொய்தீன், கண்ணன், நூரு முகமது, சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில், தமிழகத்தின் நிதி பற்றாக்குறையை சரி செய்ய முதல்வரின் கோரிக்கையை ஏற்று நிதி ஒதுக்காத மத்திய அரசை கண்டிப்பது.

 பள்ளி வாசல்களில் பணி புரியும் உலாமாக்களுக்கு சைக்கிள் வழங்கிய முதல்வருக்கு நன்றி தெரிவிப்பது.விழுப்புரம் - மயிலாடுதுறை ரயிலை நாகூர் வரை நீட்டிக்க வேண்டும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நன்றி: தினமலர்

கருத்துகள் இல்லை: